Tuesday, December 05, 2006

மாவீரர் தின உரை - 2006 - ஒரு பார்வை

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஒரு முக்கிய திருப்புமுனையில் தமிழினம் நிற்கின்ற இவ்வேளையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் தினப்பேருரை வழங்கவிருந்த செய்தியை ஈழத்தமிழினம் மட்டுமல்லாது, சர்வதேசமும் ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருந்தது. தேசியத் தலைவரின் மாவீரர் தினப்பேருரை வெளிவந்ததையடுத்து, அது குறித்துப் பல தரப்பினர்களிடமிருந்து பலவிதமான கருத்துக்கள் இப்போது வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. நாமும் எமது வழமையைப் பேணி, தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை குறித்த எமது- பார்வையைத் தர விழைகின்றோம்.

இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றோம் என்று மாவீரர்களைப் போற்றி தனது உரையைத் தொடர்ந்த தேசியத் தலைவரின் மாவீரர் தினப்பேருரையின் சாராம்சம் குறித்தும், அதன் கருத்தியல் குறித்தும் நாம் எமது பார்வையைத் தந்து சில முக்கிய விடயங்கள்- குறித்து சில தர்க்கங்களையும் முன்வைக்க விழைகின்றோம்.

தனியரசை நோக்கிய விடுதலைப் பாதையில் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவது என்று இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கின்றோம் என்று தமது தீர்க்கமான முடிவைத் தெரிவித்துள்ள தேசியத் தலைவர் சமாதானம் குறித்த தமது கருத்தையும் தெரிவிக்கத் தவறவில்லை. அது குறித்துத் தலைவர் இவ்வாறு கூறியிருந்தார்.

எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே போரை விரும்பியதில்லை. வன்முறைப் பாதையையும் விரும்பியதில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகி;ன்றோம். சமாதான வழிமுறை தழுவி அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதில்லை. இதனால்தான் திம்புவில் தொடங்கி ஜெனீவா வரை பல்வேறு தடவைகள் பல்வேறு காலகட்டங்களிற் பல்வேறு நாடுகளிற் பேச்சுக்களை நடாத்தியிருக்கின்றோம்.

ஆனால் ~சமாதானக் காலம் என்று சொல்லப்பட்ட ஐந்து ஆண்டுகாலத்தில் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகிய மூன்று சிங்களத் தலைவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்குப் பயனேதும் கிட்டியதா? அதனைத் தேசியத் தலைவர் கீழ்வருமாறு சுட்டிக்காட்டுகின்றார்.

~போர்நிறுத்தம் செய்து சமாதானப் பேச்சுக்கள் நடாத்தி ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தபோதும் எம்மக்களுக்கு சமாதானத்தின் பலாபலன்கள் எவையுமே கிட்டவில்லை. அவர்களது வாழ்வு இருண்டுபோய் நரகமாக மாறியிருக்கின்றது. தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளின் சுமை எம்மக்களை வாட்டி வதைக்கின்றது. தொடரும் போரினால் எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் தொடரும் மனிதாபிமானப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள்.

சிறிலங்காவின் புதிய அதிபராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றவுடன் தமிழீழத் தேசியத்தலைவர் தான் முன்வைத்த கோரிக்கை குறித்தும், அதனை மகிந்த ராஜபக்ச புறக்கணித்த விதம் குறித்தும் கீழ்வருமாறு கூறுகின்றார்.

~கடந்த ஆண்டு எனது மாவீரர் நாளுரையில் எமது மக்களது அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் ஒரு நீதியான தீர்வை வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலத்துக்குள் முன்வைக்குமாறு இறுதியாகவும், உறுதியாகவும் ஜனாதிபதி மகிந்தவை நான் கோரியிருந்தேன். அந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து புறமொதுக்கி விட்டு கடந்த கால சிங்களத் தலைமைகள் போன்று மகிந்தவும் தமிழின அழிப்புப் போரை தீவிரப்படுத்தியிருக்கிறார். தமிழர் தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்திருக்கின்றார்.

சமாதானத்தின்மீதும், சமாதான வழிமுறை குறித்தும் தமது விருப்பினைத் தெரிவித்த தலைவர் சிறிலங்கா அரசுகள் சமாதானத்தை விரும்பாதது குறித்தும், சமாதானத்தின் பலனை எமது மக்களுக்குத் தராதது குறித்தும், கூறியதோடு தற்போதைய மகிந்தவின் அரசு தமிழர் தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்திருப்பதையும் தெளிவாக இவ்வாறு கூறியிருந்தார். அதாவது போர்ப்பிரகடனம் செய்திருப்பது சிங்கள அரசுதான் என்பதையும், தமிழர்கள் மீது வலிந்து ஒரு யுத்தம் திணிக்கப்பட்டு வருவதையும் தமிழீழத் தேசியத் தலைவர் தெளிவாக்கியுள்ளார்.

இவ்வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புறம் தள்ளிவிட்டார்கள் என்று சிங்களக் கடும் போக்காளர்கள் பரப்புரை செய்து வருவதையும் நாம் காண்கின்றோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் அதனுடைய தற்போதைய நிலை குறித்தும் அதற்கு யார் காரணம் என்றும் தேசியத்தலைவர் தன்னுடைய மாவீரர் தின உரையில் கீழ்வருமாறு தெளிவு படுத்தியிருந்தார்.

'மகிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகின்றது. தமிழனின் நிலங்களை ஆக்கிரமித்து அதன்மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வை தமிழர் தலையிற் கட்டிவிட எண்ணுகின்றது. இந்தப் போர்முனைப்புச் செயற்பாட்டாற் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்து செயலிழந்து போய் கிடக்கின்றது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி உருக்குலைந்து கிடக்கின்றது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும்முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து மகிந்த அரச ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரிகைகளையும் நடாத்தி முடித்திருக்கிறது.

அதாவது மகிந்த ராஜபக்ச அரசின் நடவடிககை¨ளால்தான் போர்நிறுத்த ஒப்பநதம் இறந்து போய்விட்டது என்றும் அது இறந்து விட்டதை உறுதிப்படுத்தும் விதத்தில் முமு;முனைத் தாக்குதல்களைச் சிங்கள அரசு தொடர்கின்ற வகையில், சிங்கள அரசே ஒப்பந்தத்திற்கு உத்தியோக பூர்வமாக ஈமக்கிரிகைகளையும் நடாத்தியுள்ளது என்றும் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இங்கே சிங்களக் கடும்போக்காளர்கள் கேட்கின்ற கேள்வி என்னவென்றால், தங்களால் சாகடிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பிணத்தோடு, விடுதலைப்புலிகள் ஏன் பேசி;க்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்பதுதான். இத்தகைய முட்டாள்தனமான கேள்விகளை வேறு யாரிடமிருந்துதான் எதிர்பார்க்க முடியும்.?

மகிந்த ராஜபக்சவின் அரசு சமாதானக் காலத்திலேயே போர்க்கால நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்ற தமிழீழத் தேசியத் தலைவர், சிங்கள அரசு தமிழர் தாயக நிலத்தை மெல்ல, மெல்ல கூறு போட்டு வருகின்ற அபாயத்தையும் சுட்டிக் காட்டுகின்றார். தேசியத் தலைவரி;ன் மிக முக்கியமான கருத்தியல் வருமாறு:

'இராணுவ அழுத்தம், பொருளாதார நெருக்குதல் என இருமுனைகளில் எமது மக்கள் மீது சிங்கள அரசு யுத்தத்தை ஏவி விட்டிருக்கின்றது. வகைதொகையற்ற கைதுகள், சிறைவைப்புகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள் காணாமல் போதல்கள், எறிகணை வீச்சுகள், விமானக் குண்டு வீச்சுக்கள் தொடர்ச்சியான போர் நடவடிக்கைகள், என எம்மக்கள் மீது இராணுவ அழுத்தம் என்றுமில்லாதவாறு இறுக்கமாக்கப் பட்டிருக்கிறது. மக்கள் வாழிடங்;கள் இராணுவ அரண்களாலும் படைநிலைகளாலும் நிரப்பப்படுகின்றன. மறுபுறத்தில் உணவுத் தடை, மருந்துத்தடை பொருளாதாரத்தடை, போக்குவரத்துத்தடை, மீன்பிடித்தடை என எம்மக்கள் உயிரோடு வாட்டி வதைக்கப்படுகின்றார்கள்.

பிரதான வழங்கற் பாதைக்கு மூடுவிழா நடாத்திய சிங்கள அரசு தமிழரை அவர்களது சொந்த மண்ணிலேயே சிறை வைத்திருக்கின்றது. எமது மக்களின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களது சமூகவாழ்வைத் துண்டித்து, நான்கு சுவர்களுக்கு மத்தியில் அவர்களைத் தடுத்து வைத்து, அவர்களது நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொடுமைப் படுத்துகின்றது. தமிழரின் தாயகத்தை பிரதேசங்களாகப் பிரித்து, வலயங்களாக வகுத்து, இராணுவ அரண்களை அமைத்து முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு சோதனைச் சாவடிகளால் நிறைத்து, ஒரு பிரமாண்டமான மனித வதைமுகாமாக மாற்றியிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் சிங்கள அரசிடமிருந்து நியாயத்தையும், நேர்மையையும் எதிர்பார்க்க முடியுமா? இந்தக் கேள்விக்குத் தேசியத் தலைவர் இரண்டு வேறு தளங்களில் இருந்து பதில் அளிக்கின்றார். இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட அவலங்களையும், செயற்கையாக ஏற்படுத்தப் படுகின்ற அவலங்களையும் ஒப்;பிட்டு தேசியத் தலைவர் கூறுகின்ற கருத்து, எம் எல்லோராலும் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.

பல்லாயிரம் மக்கள் தமது சொந்த வீடுகளிலிருந்து குடிபெயர்க்கப்பட்டு நோயும், பிணியும், பசியும் பட்டினியும் வாட்ட அகதிமுகாம்களில் அல்லற்படுகின்றார்கள். எம்மக்களது உயிர்வாழ்விற்கான உணவையும் மருந்தையும் மறுத்து பாதையை பூட்டி பட்டினி போட்டுப் படுபாதகம் புரியும் சிங்கள அரசு எம்மக்களுக்குக் கருணை காட்டி, காருண்யம் செய்து அரசியல் உரிமைகளை வழங்கிவிடும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமே அன்றி வேறொன்றுமன்று.

இயற்கையாக ஏற்பட்ட பேரவலத்திற்கே இரங்க மறுத்து பொதுக்கட்டமைப்பை நிராகரித்த சிங்களத் தேசம் தானே செயற்கையாக திட்டமிட்டு உருவாக்கிய மனிதப் பேரவலத்திற்கு கருணைகாட்டி ஒருபோதும் நியாயம் செய்யப் போவதில்லை.

இந்தவேளையில் தேசியத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ள மிக மிக முக்கியமான விடயம் ஒன்றை தர்க்கிப்பதற்கு நாம் விழைகிறோம். இப்போது நாம் தர்க்கிக்கப் போகின்ற விடயத்தைத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியிருப்பதற்கு மிக ஆழமான உட்கருத்து இருக்க வேண்டும் என்றுதான் எமது உள்மனம் சொல்கின்றது. தேசியத் தலைவர் சொல்லியிருந்த அந்த விடயம்தான் என்ன?

போதுமான அளவிற்கு மேல் பொறுமை காத்திருக்க்¢ன்றோம். அமைதிவழி தீர்விற்கு எண்ணற்ற வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறோம். அரசியல் தீர்வை நோக்கி நகரக்கூடிய இடைவெளியைக் காட்டியிருக்கிறோம். நிலவதிர்வுப் பேரலைகள் தாக்கியபோது ஒரு தடவையும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற போது இன்னமொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டு சமாதானத்திற்கு மீண்டும் மீண்;டும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம். இதனை உலகம் நன்கு அறியும்.

ஆகவே இரண்டு தடவைகள் தமிழீழத் தேசியத் தலைவர் தனது போர்த்திட்டங்களைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டு சமாதானத்திற்கு மீண்டும் மீண்டும் சந்தர்ப்பங்களை வழங்கியிருக்கிறார். அதனை தலைவர் தெளிவாகச் சொல்லியும் இருக்கிறார். இங்கே சொல்லாமல் விட்ட செய்தி எதுவாக இருக்கும் என்று நாம் சிந்தித்துப் பார்த்தோம். அதாவது மூன்றாவது தடவை தனது போர்த் திட்டத்தை தலைவர் தள்ளிப் போடமாட்டார் என்றுதான் எமக்கு எண்ணத் தோன்றுகிறது. காலம் இதற்கு பதில் சொல்லட்டும்.!

சர்வதேசத்தை பொறுத்தவரையில் தமிழீழத் தேசியத் தலைவரின் நிலைப்பாடு மாறியிருக்கிறது என்றே எமக்கு எண்ணத் தோன்றுகிறது. இதுவரை காலமும் சிறிலங்கா அரசிற்கு சர்வதேசம் அழுத்தங்களை விதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு சர்வதேசம் சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களை விதிக்கும் பட்சத்தில்தான் சிறிலங்கா அரசு சமாதானப் பேச்சுக்களை நேர்மையான முறையில் முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும் என்றும், தமிழீழத் தேசியத் தலைமை கோரி வந்துள்ளது.

தேசியத் தலைவரின் இந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இவ்வாறான கோரிக்கைகள் எதுவும் இம்முறை முன்வைக்கப்படவில்லை. மாறாக உலக நாடுகளின் நியாயமற்ற முடிவுகளும், நியாயத்திற்கு எதிரான செயற்பாடுகளும் சிங்கள அரசிற்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்திருப்பதைத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சரியாக சொல்லப் போனால் சர்வதேசத்தின் இந்த நியாயமற்ற செயற்பாடுகள்தான் இன்றைய புறநிலைக்கு காரணிகளாக அமைந்துள்ளன. என்பதையும் தமிழீழத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதனை அவர் இறுக்கமாகத்தான் தெரிவித்துள்ளார். அவை வருமாறு:

மொத்தத்தில் அந்த அமைதிக்காலம் தமிழர் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத இரத்தம் தோய்ந்த இருண்ட காலமாக மாறியிருக்கிறது. அமைதி போதித்த உலகநாடுகள் மெளனத்துக்குள் தமது மனச்சாட்சியைப் புதைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க, தமிழர் மண்ணில் பெரும் மனித அவலம் இன்று அரங்கேறி வருகின்றது.

மகிந்தவின் அரசு தமிழ் மக்களை இன அழிப்புச் செய்கின்ற அதேநேரம் அதன் இன அழிப்புப் போரிலிருந்து தமிழ் மக்களைக் காக்கப் புலிகள் நடாத்துகின்ற ஆயுதப் போராட்டத்தை அர்த்தமற்ற பயங்கரவாதமாகச் சித்தரித்தும் வருகின்றது. தமிழரின் நீதியான போராட்டத்தை திரிபுபடுத்தி இழிவுபடுத்தி உலகெங்கும் பொய்மையான விசமப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருக்கிறது. எமது மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாது இலங்கை அரசின் இராஜரீக அழுத்தங்களுக்கு பணிந்து, அதன் பொய்யான பரப்புரைகளுக்கு மசிந்து ஐரோப்பிய ஒன்றியமும், கனடாவும் எமது விடுதலை இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன. உலக அரங்கில் எம்மை வேண்டத் தகாதோராக தீண்டத் தகாதோராகத் தனிமைப்படுத்தி ஒதுக்கி ஓரம் கட்டின.

நீதி நியாயங்களை சீர்தூக்கி பாராது, அவசரப்பட்டு எடுத்த இந்த முடிவு பாரதூரமான எதிர்; மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. சிங்கள அரசோடு பேச்சுக்களில் எமக்கிருந்த சமநிலையையும் சமபங்காளி என்ற தகைமையையும் இது ஆழமாகப் பாதித்தது. விட்டுக் கொடுக்காத கடும்போக்கைக் கைக் கொள்ளச் சிங்கள அரசு தனது போர்ததிட்டத்தைத் தடையின்றி தொடர வழி வகுத்தது. அத்தோடு அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாகத் கூறிக்கொள்ளும் சில உலகநாடுகள் சிங்களத்தின் இன அழிப்புப் போரை கண்டிக்காது ஆயுத நிதி உதவிகளை வழங்கி அதன் போர்த்திட்டத்திற்கு முண்டுக் கொடுத்து நிற்கின்றன. இப்படியான புறநிலையில்தான் மகிந்த அரசினால் தனது இராணுவ படையெடுப்புக்களை துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தமி;ழர் மண்ணில் தொடரமுடிகிறது.

இவ்வாறு சர்வதேசத்தின ;மீது இறுக்கமான விமர்சனங்களைத் தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவித்துள்ளார். இது எதனை காட்டுகின்றது என்றால் இனி சர்வதேசத்தின் செயல் திறனற்ற வேண்டுகோள்களுக்கும், நியாயமற்ற தடைகளுக்கும் தமிழீழம் செவிமடுக்காது, இணங்கிப் போகாது என்பதைத்தான்.! சுருக்கமாக சொல்லப் போனால் தமிழீழத் தேசியத் தலைமை இனிமேல் சர்வதேசத்திற்கு நெகிழ்ந்து கொடுக்க மாட்டாது என்றுதான் நாம் கருதுகின்றோம்.

ஆயினும் தமிழீழத் தேசியத் தலைவர் சர்வதேசத்திற்கு ஒரு வேண்டுகோளை இம்முறை விடுத்த்¢ருப்பதையும் நாம் காண்கின்றோம். ஆனால் இந்த வேண்டுகோள் முன்னைய கோரிக்கைகளில் இருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு இருப்பதையும் இந்த வேண்டுகோள் வேறு ஒரு தளத்தில் இருந்து விடுக்கப்பட்டு இருப்பதையும் நாம் கவனிக்கிறோம். அது வருமாறு:

எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகின்றோம்.

உலக நாடுகளையும், சர்வதேச சமூகங்களையும்- அதாவது நீதியின் வழிநடக்கும் உலக நாடுகளையும் சர்வதேச சமூகத்தையும்- நோக்கித் தேசியத் தவைர் ஒன்றே ஒன்றைத்தான் கேட்கிறார். அது தமிழரின் அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டத்தை விரைவாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான வேண்டுகோள் மட்டுமேதானே தவிர வேறு ஒன்றும் அல்ல! அதாவது நடக்கவிருக்கும் திருமணத்திற்கான மனப்பூர்வமான வாழ்த்துக்களை கோருகின்ற அழைப்புத்தான் அது! அவர்களுடைய வாழ்த்துக்கள் இல்லாவிட்டாலும் நடைபெறவிருக்கும் திருமணம் நடந்தே தீரும் என்பதுதான் உட்கருத்து.

இந்த விடயத்தை நாம் தர்க்கிக்கையில் மாவீரர் தின உரையில் இல்லாத ஒரு விடயத்தை சொல்ல விழைகின்றோம். நாம் இப்போது சொல்ல விழைகின்ற கருத்து மாவீரர் தின உரையோடும் சம்பந்தப்படாத போதிலும், சம்பந்தப்பட்ட உலக நாடுகளோடு குறிப்பாக அமெரிக்காவோடு- சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கக்கூடும் என்று நாம் சந்தேகி;ப்பதன் காரணமாக நாம் எமது கருத்தை சொல்ல விழைகின்றோம்.

இலங்கைத்தீவை அமெரிக்கா ஒரு இஸ்ரேல் நாடாக மாற்ற முனைகிறது என்ற சந்தேகம் இப்போது எமக்கு உருவாகி வருகின்றது. சிறிலங்காவின் சில செய்கைகளான வடக்கு கிழக்கு பிரிப்பு, திருகோணமலைத் தமிழர்கள் விரட்டியடிப்பு போன்றவை குறித்து அமெரிக்கா மெளனம் சாதிப்பது எமது இந்த சந்தேகத்திற்கு வலுச் சேர்க்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில் திருகோணமலை தமிழர்கள் வசம் இருப்பது நல்லதல்ல. ஏனென்றால் தமிழர்கள் எப்போதும் இந்தியாவின் நலன் சார்ந்துதான் நிற்பார்கள். ஆனால் திருகோணமலை சிங்களவர்கள் வசம் இருந்தால் அவர்கள் இந்தியாவின் நலனுக்கு எதிராகவே இருப்பார்கள். சிங்களவர்களின் இந்த இந்திய எதிர்ப்புப் போக்கு அமெரிக்காவிற்கு உகந்ததாகவும் உவந்தததாகவும் இருக்கும். அமெரிக்காவின் தென்கிழக்காசிய பிராந்திய மேலான்மை முயற்சிக்கு பலமாகவும் இருக்கும்.

இங்கே இன்னுமொரு கருத்தையும் சேர்த்துச் சொல்ல விழைகின்றோம். சிறிலங்காவின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காக கடல் தரை வான் தாக்குதல்களைத் தாம் நடாத்துவது போர் நிறுத்த மீறல் அல்ல, என்று சிறிலங்கா அரசு வாதிடுகின்றது. இது அப்படியாயின் இதே கருத்து இதே வாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பொருந்தும். தமிழீழம் மக்களை காப்பாற்றுவதற்கும், தமிழீழத்தைக் காப்பாற்றுவதற்கும் புலிகள் தாக்குதல்களை நடாத்தினால் அவையயும் போர்நிறுத்த மீறல்கள் அல்ல என்றுதான் நாம் கருதவேண்டும்.

சர்வதேசத்தைப் பொறுத்த வரையில் நாம் தொடர்ந்தும் சில விடயங்களைத் தர்க்கித்தே வந்துள்ளோம். சர்வதேசம் நீதியாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் தமிழரின் தேசியப் பிரச்சனையில் நடந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் சர்வதேசம் வெறும் பார்வையாளர்களாகக் கூட இருக்க முடியாத நிலை உருவாகும் என்றும் நாம் கூறி வந்துள்ளோம். அந்தநிலை விரைவில் வரக்கூடும் என்றுதான் எமக்கு இப்போது தோன்றுகின்றது. ஆகையினால்தான் முறையாக வழிகாட்ட வேண்டிய சர்வதேசம், இன்று வாழ்த்துச் சொன்னால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழீழத் தனியரசு அமைவது என்பதானது, ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பைத்தான் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களும், தமிழக மக்களும் நாடி நிற்கின்றார்கள். சர்வதேசம் இந்தத்; தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாது என்ற கருத்து எழுந்தால், அந்தக் கருத்து ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் தீர்ப்பை பாதிக்காது என்பதுதான் உண்மை. இதனையும் வருங்காலம் உணர்த்தும். தமிழ் மக்களின் பிரச்சனையில் சர்வதேசத்திற்கு உண்மையான அக்கறையிருந்தால் சர்வதேசம் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

அதனால்தான் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான தார்மீக கடமையை ஆற்றுமாறும், அதற்குரிய உதவியையும், நல்லாதரவையும் தருமாறும் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களுக்கும், தமிழக உறவுகளுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் தனது மாவீரர் தின உரையில் உரிமையோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் உறவுகளை மட்டும் நோக்கித்தான் இந்த வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மாவீரர்களைச் சிரந்தாழ்த்தி வணக்கம் செய்த நாளிலே தேசியத் தலைவர் தமிழ் உறவுகளின் பெரும் பங்களிப்புக்கும், உதவிகளுக்கும் தனது அன்பையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தலைவரின் வேண்டுகோளை மனப்பூர்வமாக மகிழ்வுடன் ஏற்று அவருடைய கரங்களை நாம் பலப்படுத்துவதன் மூலம் சுதந்திர தமிழீழத் தனியரசை விரைவில் அமைத்திடுவதற்கு நாம் எமது தார்மீகக் கடமையைச் செய்வோம்!.

-சபேசன் (அவுஸ்திரேலியா)-

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

Tuesday, November 28, 2006

தமிழீழத் தனியரசுதான் தீர்வு- தேசியத் தலைவர்

தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சி நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையன்று தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையின் முக்கிய அம்சம்:

"நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானத்திற்கான இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகி நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் நாம் எம்மால் இயன்றதைச் செய்தோம். பொறுமையினைக் கடைப்பிடித்தோம். அமைதிவழித் தீர்வினைக் கொண்டுவருவதற்காக எண்ணிலடங்கா சந்தர்ப்பங்களை வழங்கினோம். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது ஒரு தடவையும், மகிந்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான திட்டத்தினை ஒத்திவைத்து, சமாதான முயற்சிகளுக்கு மேலும் சந்தர்ப்பங்களை வழங்கினோம்.

தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டிநிற்கின்றோம்.

தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம்.

இடம்பெயர்ந்து உலகம் பூராகவும் பரந்து வாழும் புலம்பெயர்வாழும் தமிழ் உறவுகள் எமது போராட்டத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புக்களுக்கு எங்களது அன்பையும் நன்றிகளையும் நாம் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும், ஆதரவினையும் தொடந்தும் வழங்கும்படி கேட்டுநிற்கின்றோம்.

தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சி நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையன்று தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய முழுமையான உரையை இங்கு வாசிக்கலாம்:

http://www.eelampage.com/?cn=29959

Saturday, November 18, 2006

ஓராண்டு கால ஆட்சியில் மகிந்த சாதித்தது என்ன?

சிங்கள இனத்தின் கடும்போக்காளர் என பலராலும் கருத்துக்கூறப்பட்ட மகிந்தவின் புதிய அரசு பதவியேற்று ஒரு வருடம் இந்த மாதம் 18 ஆம் நாளுடன் பூர்த்தியடைகின்றது. இந்த கடும்போக்கு அரச கூட்டணியால் தமிழ் மக்களின் விடுதலைப் போரை மழுங்கடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முதலில் போர்நிறுத்த ஒப்பந்தமீறலாகி, மென்தீவிரயுத்தமாகி, தீவிர போராகி இன்று சத்தமின்றி நாலாம் கட்ட ஈழப்போர் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

போர்நிறுத்தத்தில் உள்ள பலவீனமான சரத்துக்களையும், கருணா குழு என்ற ஒட்டுக்குழுவையும் நம்பி மகிந்தர் ஆரம்பித்த போர் இந்த ஒரு வருடத்தில் அவரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியுள்ளதா?

மகிந்த சுதந்திரக்கட்சியில் இருந்து ஜனாதிபதியாக தெரிவாகி இருந்தாலும், ஜனாதிபதியான பின்னர் பண்டாரநாயக்கா குடும்பம் அரசியலில் கொண்ட செல்வாக்கை போல ஏன் ராஜபக்ச குடும்பம் ஒரு உயர்மட்ட செல்வாக்கை பெறமுடியாது என சிந்திக்க தலைப்பட்டுள்ளார். எனவேதான் தனது முதல் வேலையாக பண்டாரநாயக்க குடும்பத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்ட ஆரம்பித்திருந்தார். ஓரங்கட்டுவது மட்டுமல்லாது முற்றாக அழித்துவிடவும் மகிந்த துணிந்துவிட்டார் என்றே கூறமுடியும்.

அதனால் தான் முன்னைநாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது உயிரை கையில் பிடித்தபடி லண்டனுக்கும் அமெரிக்காவிற்கும் பறந்து கொண்டிருந்தார். அவர் ஒரு சாதாரண பிரஜையாக கூட இலங்கை திரும்ப முடியவில்லை. இறுதியில் யுனெஸ்கோவில் ஒரு பதவியை பெற்றுக்கொண்டு உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க தனது நாட்டிற்கு தற்போது திரும்பியுள்ளார். இனிமேல் மகிந்த நினைத்தாலும் சந்திரிகாவை கொல்ல முடியாது ஏனெனில் ஒரு யுனெஸ்க்கோ பிரதிநிதியை கொன்றுவிட்டார் என்ற பழி அரசு மீது வீழ்ந்துவிடும்.

மகிந்தவின் அடுத்த இரு நகர்வுகளும் மகிந்தரின் இனவாதக் கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியவை. தனது குடும்ப உறுப்பினர்களையும் அவர்களின் விசுவாசிகளையும் பொறுப்பான பதவிகளில் அமர்த்தியதுடன். எதிர்த்தரப்பு முக்கியஸ்தர்களும் ஓரங்கட்டப்பட்டார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் நியமனங்களும், மேஜர் ஜெனரல் வஜீர விஜயகுணவர்த்தன தூக்கி எறியப்பட்டதும்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்து அதன் உறுப்பினர்களை உள்வாங்குவது இரண்டாவது உத்தி. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்சி தாவியவர் தான் கேகலிய ரம்புக்வெல. தற்போது அவர் செஞ்சோற்றுக் கடன்கழிக்கும் தொழிலை தான் செம்மையாக செய்து கொண்டு இருக்கிறார்.

அரசியலில் தனது கட்சி மற்றும் குடும்ப அரசியலை உறுதிப்படுத்தும் வேலைகளை முடுக்கிவிட்ட மகிந்த தென்னிலங்கையில் தனது செல்வாக்கை வலுப்படுத்த அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார். அது என்ன என்பதை நீங்களே ஊகித்திருப்பீர்கள். தமிழ் மக்களின் மீதான ஆக்கிரமிப்பு போர்களையே சிங்கள அரசுகள் தென்னிலங்கையில் தமது செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு எப்போதும் கையில் எடுப்பதுண்டு.

'போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என ஜே.ஆரும், 'சமாதானத்திற்கான போர்" என சந்திரிகாவும் ஏறிய குதிரைக்கு பெயர் மாற்றப்பட்டது. அதுதான் 'பேச்சும் போரும்" இந்த பேச்சும் போரும் என்ற தந்திரம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தேசப்பற்றாளர்களையும், அப்பாவி பொதுமக்களையும் கருணா குழு என்ற போர்வையில் சிங்களப்படை படுகொலை செய்ய ஆரம்பித்ததில் இருந்து தீவிரமானது. இதை எதிர்த்து மக்கள் படையின் தற்காப்பு தாக்குதல்களும் ஆரம்பமாகின. வேறு வடிவில் சொல்வதானால் நாலாம் கட்ட ஈழப்போரின் கொரில்லாத் தாக்குதல்கள் உக்கிரமாகின.

விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என சிங்களப் படைகளின் போர் எல்லைகள் விரிந்தன. இந்த போர்முனைப்புக்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு ஏற்பட்டது. தாக்குதல்கள், பதில் தாக்குதல்கள், ஊடுருவித் தாக்குதல்கள் என களம் கட்டுமீறியது. கருணா குழு என அரசு போட்டிருந்த முகமூடி தூக்கி வீசப்பட்டது. நேரடியான மோதல்களில் சிங்கள அரசு இறங்கியது அதற்கு காரணமும் அரசால் கூறப்பட்டது.

எனினும் அவசரமான ஒரு இராணுவ வெற்றி மகிந்தருக்கு தேவைப்பட்டது ஏனெனில் ஜே.வி.பி, கெல உறுமைய போன்றவற்றின் வாயை அடக்குவதற்கும், முடிந்தால் பொதுத்தேர்தலையும் நடாத்திவிடுவதற்கும். இந்த இராணுவ வெற்றிக்கு முதற்படியாக போர்நிறுத்த காலத்தில் புலிகளின் பலத்தை குறைத்துவிட திட்டமிட்டது அரசு. இதற்காக மூன்று அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டன.

 • சர்வதேசத்தடைகள், உள்ளுர் பொருளாதார தடைகள், தமிழ் வர்த்தகர்கள் மீதான படுகொலைகள் மூலம் புலிகளின் நிதிவளத்தை முடக்குதல்.
 • வலிந்த தாக்குதல்கள் மூலம் புலிகளின் படைபலத்தை குறைத்தல்.
 • விமானக் குண்டுவீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், படுகொலைகள் மூலம் தமிழ் மக்களின் போரிடும் மனவலிமையை சிதறடித்தல்.

'எந்தத்தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் இருக்கும் (For every action, there is an equal and opposite reaction) என்ற நியூட்டனின் மூன்றாம் விதி சிங்கள அரசிற்கு புரியாது போனது தான் ஆச்சரியம். சிங்கள அரசின் தாக்குதல்களுக்கான பதிலடிகள் தெரிந்தெடுத்த இலக்குகள், தெரிந்தெடுத்த படையணிகள், அழிக்கப்பட வேண்டிய கனரக போர்க்கலங்களின் மீது துல்லியமாக வீழ்ந்தது.

பெரும் படையணிகள், கடும் சூட்டாதரவுடன் கிழக்கில் சிங்களப்படை நகர்வுகளை மேற்கொண்டது. ஆனால் அதற்காக அவர்கள் கொடுத்த விலைகள் அதிகம். வடக்கில் மேற்கொள்ள முனைந்த இராணுவ ஆக்கிரமிப்பு மண்ணைக்கவ்வியது. சிங்களப்படைகள் ஆரம்பித்த போர் சிங்களப்படைகளின் இருப்பை கேள்விக்குறியாக்கியது. அதாவது யாழில் உள்ள இராணுவம் தனது இருப்புக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

யாழில் உள்ள படையினரின் ஒரே ஒரு வழங்கல் பதையான கடலும் (40,000 துருப்புக்களை வான்வழி வழங்கல் மூலம் தக்கவைக்க சிங்கள அரசால் முடியாது) அடிக்கு மேல் அடிவாங்கி மூச்சிழுக்கும் நிலைக்கு வந்துள்ளது. அதாவது இந்த ஒரு வருடச்சமரை ஏன் நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்துவிட்டதாக கருதுகிறோம்?

இதற்கு ஆதாரமாக இரண்டாம் ஈழப்பரின் ஓராண்டு நிறைவையும், மூன்றாம் ஈழப்போரின் ஓராண்டின் நிறைவையும் ஓப்பிட்டு பார்த்தல் பயனுள்ளது.

 • இரண்டாம் ஈழப்போரின் ஒருவருடத்தில் (10.06.1990 - 10.06.1992) சிங்களப்படை இழந்தவை: கண்காணிப்புக்கப்பல் - 01, சியாமாச்செட்டி குண்டுவீச்சு விமானம் - 01, ஏறத்தாள 2600 துருப்புக்கள்.
 • மூன்றாம் ஈழப்போரின் ஒரு வருடத்தில் (19.04.1995 - 19.04.1996) சிங்களப்படை இழந்தவை: கட்டளைக்கப்பல்கள்-02, பீரங்கிப்படகுகள் (Shangai class)-02, டோரா-03, ரோந்துப்படகு-01, அவ்ரோ-02, புக்காரா-01, MI-17 -01, Y-8 -01, அன்ரனோவ் - 02, டாங்கிகள் - 05, ஏறத்தாழ 2,100 துருப்புக்கள்.
 • உக்கிரமற்ற நாலாம்கட்ட ஈழப்போரின் ஒரு வருடத்தில் சிங்களப்படை இழந்தவை: கட்டளைக்கப்பல்-01, டோரா-07, ரோந்துப்படகு-02, கிபீர்-01, டாங்கிகள்-12, 1,600-க்கும் மேற்பட்ட துருப்புக்கள்.

மேற்கூறப்பட்ட இழப்புக்களை பார்க்கும் போது புலிகளின் வலிமை எத்தகையது என ஓரளவு ஊகிக்க முடிவதுடன் உக்கிரமற்ற போரின் உக்கிரமும் விளங்கும்.

ஏனெனில் பிரகடனப்படுத்தப்படாத இந்த ஒருவருடப் போரில் புலிகள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மட்டும் தான் மேற்கொண்டுள்ளார்கள். அதாவது கனரக ஆயுதங்களையோ, ஏவுகணைகளையோ அதிகளவில் பாவிக்க முனையவில்லை என்பது ஒருபுறம். தற்காப்புத்தாக்குதல்கள் தவிர்ந்த பெரும் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பது மறுபுறம். போர்நிறுத்தம் என்ற சங்கிலியால் ஒரு கை கட்டப்பட்ட நிலையில் சமர்பூ¢ந்துள்ளார்கள் என சுருக்கமாக கூறலாம்.

சிங்கள அரசின் கடற்படை இந்த ஒரு வருடத்தில் சந்தித்த இழப்புக்கள் ஈழப்போர் வரலாறுகளுடன் ஒப்பிடும் போது மிக அதிகம். அதாவது குறுகிய காலத்தில் இழந்த பயிற்றப்பட்ட படையினரதும், வலிமையான கலங்களினதும் இழப்புக்கள் மிக அதிகம். மூன்றாம் ஈழப்போர் எப்படி சிங்கள தரைப்படையையும், விமானப்படையையும் முடக்கியதோ அதே போன்று நாலாம் கட்ட ஈழப்போரின் முழுமையான ஆரம்பம் கடற்படையை வலுவிழக்க செய்துவிடும் என்பது தான் நிகழ்வுகளின் சுருக்கம்.

இன்று அழிவைநோக்கி உள்ள தனது துருப்புக்களை காப்பாற்றுவதற்காக கொத்துக் கொத்தாக அப்பாவி மக்களையும், தெரிந்தெடுத்த மக்களின் பிரதிநிதிகளையும் கொன்று குவிக்கிறது அரசு. அதாவது இந்த ஒரு வருடத்தில் அரசின் இராணுவ முனைப்புக்கள் எல்லாம் எதிர்வினையாகிப் போனதும், சிங்கள அரசு மெல்ல மெல்ல சர்வதேச விதிமுறைகளில் இருந்து விலகிப்போகும் ஒரு பயங்கரவாத அரசாக மாறிக்கொண்டு இருப்பதும் உண்மை. அரசிற்கு முண்டுகொடுத்துவந்த மேற்குலகத்திற்கும், சில ஆசியநாடுகளிற்கும் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குலகை பொறுத்தவரை தங்கள் மீது மூன்றாம் உலக நாடுகள் கொண்டுள்ள கொஞ்ச நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் கண்டனங்கள், கவலைகள், குயடைநன ளுவயவந என்ற பிரகடனம், மனித உரிமை அமைப்புக்களின் சாடல்கள் எல்லாம். மகிந்தவின் ஆட்சியின் வருட முற்பகுதியில் புலிகள் மீது வீழ்ந்த அழுத்தங்கள் பிற்பகுதியில் அரசை நோக்கி திரும்பத்தொடங்கியுள்ளன. ஆனால் இந்த அழுத்தங்கள் செயல்வடிவில் எவ்வளவு காத்திரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் தான் அமைதிமுயற்சியின் ஆயுட்காலம் தங்கியுள்ளது. எனவே மேற்குலகின் ஏட்டுச்சுரக்காயால் தற்போதைக்கு பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.

எனினும் சர்வதேசத்தினதும், சர்வதேச அமைப்புக்களினதும் இத்தகைய கண்டனங்களும், அறிக்கைகளும், புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களும், புலிகளின் தாக்குதல்களும், முறிந்துபோன பேச்சும், அதிகரித்த பாதுகாப்புச்செலவும் சிங்கள அரசின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அதாவது அரசால் ஆரம்பித்த வலிந்த போர் அதன் பொருளாதாரத்தின் அத்திவாரத்தை ஆட்டம்காண வைத்துள்ளது. வேறுவிதமாகக் கூறின் சாதாரண சிங்கள மக்கள் போரின் சுமையை சுமக்கப்போகிறார்கள்.

அரசு தனது பொருளாதாரம் முன்னேற்றமாக உள்ளது என காட்டும் அறிக்கைகள் எல்லாம் போலியானவை என்பது பொருளியல் வல்லுனர்களின் கருத்து. இந்த பொருளாதாரத்தை சீர்செய்யாது மகிந்த சிந்தனையை தெற்கில் நடைமுறைப்படுத்த முடியாது.

அதாவது இந்த ஒரு வருடத்தில் மகிந்தவின் இராணுவக்கனவு எதிர்வினையாகியதால் தென்னிலங்கையில் ஏற்பட்ட பலவீனம், சர்வதேசத்தில் சிங்கள அரசு மீது ஏற்பட்டுள்ள அதிதிருப்தி, பொருளாதார நெருக்கடி போன்றவை மகிந்தவின் அரசியல் செல்வாக்கை தென்னிலங்கையில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதில் எதிர்க்கட்சிகளினதும், கூட்டணி கட்சிகளினதும் பங்கும் காத்திரமானது அதாவது மகிந்தா¢ன் செல்வாக்கை சரிப்பதற்கு போர் தான் சரியானவழி என அவர்கள் கணிப்பிட்டு அதற்கு ஏற்ப மகிந்தரை உசுப்பேத்தி விட்டிருந்தனர். மாவிலாறை நோக்கி படையெடுத்த கெல உறுமய, நீல அல்லி பிரச்சாரம் மேற்கொண்ட ஜே.வி.பி, மகிந்தரின் போர் நடவடிக்கை வெற்றிகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்ற சஜீத் பிரேமதாசாவின் (ஐ.தே.க) கூற்று என்பன இதையே எடுத்தியம்புகின்றன.

வரலாறும் இதைத்தான் கூறி நிற்கின்றது. 1977 இல் ஜே. ஆரின் திறந்த பொருளாதாரக்கொள்கை சிங்கள அரசின் பொருளாதாரத்தை சிங்கப்பூரை விட அதிகளவில் உயர்த்தும் எனவும் ஐ.தே.கவை அசைக்க முடியாது எனவும் தென்னிலங்கை கனவுகண்டது. ஆனால் ஜே.ஆரின் போர்வெறி அவரை இறுதியில் அநாதை பிணமாக்கியது.

1989 இல் அதிகாரத்திற்கு வந்த பிரேமதாசாவின் '2000 ஆம் ஆண்டில் எல்லோர்க்கும் புகலிடம்" என்ற கோசம் தென்னிலங்கையில் பட்டி தொட்டியெல்லம் எதிரொலித்தது. ஆனால் அரைகுறை ஆட்சியில் அவர் நடுத்தெருவில் உயிரைவிட்டது தமிழ் மக்கள் மீது தொடுத்த போரினால்.

1994 இல் பதவிக்கு வந்த சந்திரிகா அம்மையார் சிங்கள தேசத்தின் அதிர்ஸ்ட தேவதையாக மின்னினார். ஆனால் அவர் கொட்டிய போர்முரசு அவரை அரசியல் அநாதையாக்கியதுடன். தனது உயிரை காப்பாற்ற இன்று உலகெங்கும் ஓடவேண்டிய நிலைக்கும் கொண்டு சென்றுள்ளது.

இவை எல்லாம் அவர்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடிய போரின் விளைவுகள் தான். இந்த வரலாற்றை சீர்தூக்கிப் பார்க்க மறுத்த மகிந்தவிற்கு கடந்து போன ஆண்டு நல்ல படிப்பினையை கொடுத்திருக்கும் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இதை மேலும் உதறித்தள்ளியவராக மகிந்தரின் வரும் ஆண்டுகளும் அமையின் ராஜபக்ஷ என்ற சொல்லை தென்னிலங்கை அரசியலில் இருந்து அழிக்கக்கூடிய வல்லமை ஈழப்போருக்கு உண்டு என்பதை காலம் கற்பிக்கும்.

- அருஸ் (வேல்ஸ்) -

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

Sunday, November 05, 2006

ஜெனீவா சொன்ன செய்தி என்ன?

ஜெனீவா அமைதிப்பேச்சு தமிழ் மக்களால் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று கூறலாமா? அது தவறானது அன்னிய தேசத்தின் இதயசுத்தியுள்ள அழுத்தங்கள் சிங்கள அரசு மீது இறுகும் வரையில் அல்லது சிங்கள அரசின் போரிடும் வலுவை முற்றாக அழிக்கும் வரையில் அதனுடன் பேசுவதில் பயனில்லை என்பது தழிழீழத்தில் முளைத்த புல்லுக்கும் தெரியும்.

இந்தப் பேச்சுக்களை ஆவலாக எதிர்பார்த்தவர்கள் ஒன்று சர்வதேசம் என தம்மை அழைத்துக்கொள்ளும் சில மேற்குலக நாடுகளும், ஆசிய நாடுகளும். இரண்டாவது சிங்கள அரசு (இதை நம்புவதற்கு உங்களுக்கு கடினமாக இருக்கும்).

இந்த இருதரப்புக்கும் பலத்த ஏமாற்றத்தை ஜெனீவாப் பேச்சுக்கள் கொடுத்திருக்கும் என்பது தான் உண்மை. புலிகளின் மீது அழுத்தங்களையும் தடைகளையும் போட்ட இணைத்தலைமை நாடுகளில் பெரும்பாலான நாடுகள் அந்த அழுத்தங்களின் ஊடாக ஐக்கிய இலங்கை என்னும் பகட்டு வார்த்தைக்குள் ஒழிந்துள்ள தழிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வை திணிக்க முனைந்து நின்றன. அதன் வெளிப்பாடுகள் தான் சிங்கள அரசு தமிழீழத்திற்குரிய நிலத்தை ஆக்கிரமிக்கும் போது மெளனம் காப்பதும், புலிகளின் தற்காப்பு பதில் தாக்குதலில் சிங்களப்படை புறமுதுகிடும் போது பதறியடித்துக்கொண்டு ஓடி வருவதும் அறிக்கை விடுவதும்.

அதாவது புலிகளை அமைதிப்பேச்சு என்ற சொல்லைக்கொண்டு கட்டிவிட்டு அழுத்தங்கள், படுகொலைகள் மூலம் இன விடுதலையை மழுங்கடித்து விடுவது. இது தான் சில மேற்குலக நாடுகளினதும், ஆசிய நாடுகளினதும் தந்திரம். சிங்கள அரசுகளை பொறுத்தவரை தனது பொருளாதார தேவைகளுக்கும், அரசியல் நலன்களுக்குமாக தமிழ் மக்களையும் அவர்களது விடுதலை போரையும் பயன்படுத்தி வருவதுண்டு.

அதாவது இராணுவ நடவடிக்கைகள் மூலம் தெற்கில் தன்னை ஒரு சிங்கள பேரினவாதிகளின் காவலனாக காட்டி வாக்கு வங்கிகளை அதிகரிப்பது ஓருபுறம், பேச்சுக்களில் ஆர்வமாக இருப்பது போல் பாசாங்கு செய்து சர்வதேச உதவிகள் மூலம் தனது நிதி வறட்சியை ஈடுசெய்வது மறுபுறம்.

அண்மையில் மகிந்தருக்கும் ரணிலுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் கூட இருகட்சிகளும் தமக்குரிய சர்வதேச ஆதரவை தக்கவைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பதற்குமாகவே செய்யப்பட்ட ஒப்பந்தம் பேரினவாதிகளை மீறி இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு எதையும் வழங்கப்போவதில்லை.

தென் ஆசியாவின் பிராந்திய வல்லரசு எனப்படும் இந்தியா இலங்கையுடன் செய்திருந்த இந்திய-இலங்கை ஓப்பந்தத்தின் இறுதியாக எஞ்சியிருந்த வடக்கு-கிழக்கு இணைப்பைக்கூட பிரித்து இந்தியாவின் முகத்தில் கரியைப் பூசிய சிங்கள பேரினவாதிகளின் முன் ரணில்-மகிந்த ஒப்பந்தம் எம்மாத்திரம்? அன்றைய அரைகுறை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்குக் கூட சிங்கள அரசின் வான்பரப்பில் அத்துமீறி நுளைந்து உணவுப்பொதிகளை வீசி தனது படையின் பலத்தை கொண்டு சிங்கள அரசை மிரட்டியிருந்தது இந்திய அரசு. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் இன்று எஞ்சியிருப்பது என்ன?

சாதாரண ஒரு சிங்கள அரச ஆதிக்கமுடைய நீதித்துறையினால் கிழித்து எறியக்கூடிய ஒப்பந்தத்தை தமிழ் மக்களுக்கு அதிக உரிமைகளை கொடுக்கும் ஒரு ஒப்பந்தமாக பிரகடனப்படுத்தி அதை நிறைவேற்ற புலிகள் தடையாக உள்ளார்கள் என்று தமிழ் மக்களின் மீது கொடிய போரை கட்டவிழ்த்து விட்டது இந்திய அரசு. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் கொன்று குவித்திருந்தது. ஆனால் இன்று கிழித்து எறியப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இந்திய ஆட்சியாளர்களின் கருத்து என்ன?

இவை மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்களால் குப்பையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ஏராளம். இனப்பிரச்சனைத் தீர்வுக்கென அமைக்கப்பட்ட குழுக்கள் ஏராளம். கூடிய கூட்டங்கள் எண்ணுக்கணக்கற்றவை இவற்றை நம்பி ஏமாந்த தமிழ்க்குழுக்களும் உண்டு. ஆனால் எந்த ஒரு தீர்வோ அல்லது தீர்வுக்குரிய அறிகுறியோ தென்படாதது ஏன்??

தென்பகுதி அரசியல் கட்சிகள் தமது அரசியல் பொருளாதார வரட்சியை ஈடுசெய்வதற்கு கூடும் கூட்டங்களை இனப்பிரச்சனை தீர்வுக்குரிய கூட்டங்களாகவும், குழுக்களாகவும் அர்த்தப்படுத்துவதுண்டு. அதனை சில ஆசிய நாடுகளும், சில மேற்குலக நாடுகளும் தீர்வைத்தரப்போகும் மிகச்சிறந்த நடவடிக்கையாக பாராட்டுவதும் அறிக்கை விடுவதும் வழமை. இது தமது பிராந்திய ஆதிக்கத்தை நினைவுபடுத்தவும், இந்து சமுத்திரத்தில் தமக்கு அக்கறை உண்டு எனக் காட்டுவதற்குமாக அந்தந்த நாடுகளின் முயற்சி. சில நாடுகள் இலங்கையில் நடக்கும் போரின் உண்மை நிலையைக்கூட விளங்க முற்படாது அறிக்கைகள் வெளியிடுவதுண்டு.

நோர்வேயின்; சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சரும் அமைதிப் பேச்சிற்கான அனுசரனையாளருமான எரிக் சொல்ஹெய்ம்; கருத்து கூறும்போது, பேச்சுக்கள் வெற்றியளித்தால் ஒதுக்கப்பட்ட பெருமளவு உதவித்தொகை சிங்கள அரசுக்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இது தான் பேச்சுக்கு நிபந்தனை விதித்த ரம்புக்வெலவை குத்துக்கரணமடிக்க வைத்த மர்மம் இந்த உதவித்தொகை ஏறத்தாழ நாலரை பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது சிங்கள அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி இதை பெற்றுவிட வேண்டும் என்று தான் ஜெனீவாப் பேச்சுக்கு முன்னர் அவசர அவசரமாக மகிந்த, ரணிலை அரவணைத்தது. நிமால் ஸ்ரீபால டீ சில்வா அரசியல் தீர்வைப்பற்றி பேசப்போகிறோம் என அடிக்கடி அறிக்கை விட்டதும் இதற்காகத்தான்.

அமைதிப்பேச்சை காரணமாக்கி சிங்கள அரசு நிதியைப்பெற்று அதில் பெருமளவை போருக்கு செலவு செய்யப்போகின்றது என்பது தான் உண்மை. அதன் வெளிப்பாடு தான் அண்மைய பாதுகாப்புச்செலவு ஒதுக்கீடான 139.5 பில்லியன் ரூபாய்கள். இவ்வளவு நம்பிக்கையீனமான பேச்சிற்கு புலிகள் ஏன் சென்றார்கள்?

ஓன்று இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தல், இரண்டாவது சிங்கள அரச பயங்கரவாதத்தால் அன்றாடம் அல்லற்படும் மக்களின் துயரத்தை உலகிற்கு எடுத்து சொல்லுதல் ஆறு இலட்சம் மக்களை ஒரு திறந்த சிறைச்சாலை போன்ற குடாவிற்குள் அடைத்துவிட்டு அரைகுறை உணவைப் போட்டு சித்திரைவதைகளும் படுகொலைகளும் புரியும் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொண்டு வருவதும் அதற்கு சர்வதேசத்தின் எதிர்வினைகள் எப்படியாக இருக்கப்போகின்றன என்பதையும் அறியும் முயற்சி. எனவே ஜெனிவாவில் ஏற்பட்ட தோல்வி சிங்கள அரசிற்கும் அதன் தோழமை சக்திகளுக்கும் கிடைத்த தோல்வி என்பதே யதார்த்தம்.

போர்நிறுத்தத்தை பொறுத்தவரை முற்று முழுதாக பொது மக்களின் பாதுகாப்புக் கருதி உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் அவலங்களை கண்காணிப்புக்குழுவோ, சமாதான அனுசரணையாளரான நோர்வேயோ அல்லது இணைத்தலைமை நாடுகளோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. நோர்வேயின் சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம்;;, யப்பான் நாட்டுப் பிரதிநிதி அகாசி, ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் எல்லோரும் சமாதான முயற்சிகள் முன்னகராது விட்டால் இருதரப்பும் பொருளாதார, அரசியல் ரீதியிலான சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிக்கை விட்டிருந்தார்கள்.

இங்கு இருதரப்பின் மீதான அழுத்தம் என்பது பொய்யானது ஏனெனில் புலிகள் மீது தடைகள், பயணத்தடைகள் என எல்லா அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே புலிகளின் மீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்க இனிமேல் ஏதுவுமில்லை. ஆகவே சிங்கள அரசுமீது அழுத்தங்கள் போடப்படலாம் என்பதே உள்ளார்ந்த கருத்து. ஆனால் வெறும் வாய்வார்த்தைகள் ஒன்றும் செய்யப்போவதில்லை. சர்வதேச நாடுகள் அமைதி வழியில் இனப்பிரச்சனையை தீர்க்க விரும்பினால் சிங்கள அரசு மீது செயல்வடிவில் பிரயோகிக்கும் பொருளாதார அரசியல் அழுத்தங்கள் தான்; அதற்கு ஒரேவழி.

சர்வதேசம் இதை செய்யத்தயாரா? என்பது தான் இன்றைய முக்கிய கேள்வி. இதற்கான பதிலில் தான் போரா சமாதானமாக என்பதும் தங்கியுள்ளது.

எந்தவித அழுத்தங்களும் போடப்படாமல் சிங்கள அரசை வழிக்கு கொண்டுவர முடியாது. சிங்கள அரசுக்கு மட்டுமல்லாது உலகெங்கும் இருந்த இனவாத அரசுகளையும் இப்படிப்பட்ட அழுத்தங்கள் மூலமே பணியவைத்தது வரலாறு.

உதாரணமாக யப்பானை எடுத்தால் வடகொரியா அணுகுண்டுப் பரிசோதனை செய்து இருவாரங்களில் அதன் மீது ஐ.நா சபையில் அழுத்தங்களை கொண்டுவர எடுத்த அக்கறையை போல நான்கரை வருடங்களாக அமைதிப்பேச்சு என்ற போர்வையில் இன அழிப்பையும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுள்ள சிங்கள அரசுமீது மேற்கொண்டது கிடையாது.

வடகொரியா வெடித்த அணுக்குண்டினால் எத்தனை பேர் பலியானார்கள்? வடகொரியா தற்போது தான் பரிசோதனையை செய்துள்ளது இன்னும் ஓரு பத்து அல்லது இருபது வருடங்களில் யப்பானை அச்சுறுத்தலாம் அல்லது அச்சுறுத்தாமலும் இருக்கலாம். ஆனால் தினம் தினம் ஒரு இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கு வாய்வழி அழுத்தங்களை பிரயோகிக்கும் யப்பான் வடகொரியா மீது இருவாரங்களில் செயல்வடிவில் அழுத்தங்களை இட்டது எப்படி?

15,000 மக்களுக்கான நீர்விநியோகம் 15 நாட்கள் தடைப்பட்டதை மனிதாபிமான பிரச்சனையாக்கி உலகெங்கும் பிரச்சாரப்படுத்திய சிங்கள அரசு நீரை திறந்துவிட்ட பின்னரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு மக்களுக்கு நீர் வழங்கவென மாவிலாறை ஆக்கிரமித்துக்கொண்டது. ஆனால் இன்று ஆறு இலட்சம் தமிழ் மக்களுக்குரிய உணவையும், இயல்பு வாழ்க்கையையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி பெரும் இன அழிப்பை மேற்கொள்ள முனைந்து நிற்கின்றது.

அமைதிப் பேச்சிற்கு முன்னோடியாக மக்களின் இயல்பு வாழ்கையை சீர்செய்யுங்கள் என்றுதான் புலிகள் கேட்டார்கள். ஆனால் சர்வதேசத்திற்கு முன்னால் வைத்து தமிழ் மக்களுக்குரிய மனிதாபிமான பிரச்சனையை கூட தீர்க்க முடியாது என கூறிவிட்டது அரசு. தமிழ் மக்கள் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் ஜெனீவா - 01 இல் ஒப்புக்கொண்ட விடயங்களில் எதை நிறைவேற்றியது சிங்கள அரசு?

சரி, தற்போது பதையை திறக்க அரசு ஓப்புக்கொண்டுள்ளது என வைத்துக்கொள்வோம். நாளைக்கு புலிகள் செல் அடித்து விட்டார்கள் என்று கூறிக்கொண்டு அதை இழுத்து மூடாது என்பது என்ன உறுதி? தற்போது நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள், விமானத்தாக்குதல்கள் எல்லாவற்றிற்கும் புலிகள் ஆட்டிலறியால் தாக்கிவிட்டார்கள், துப்பாக்கியால் சுட்டுவிட்டார்கள் என பொய்யான காரணங்களை கூறிக்கொண்டு தானே மேற்கொள்கிறது. உண்மை நிலையை சென்று பார்க்க சிங்கள அரசு அனுமதிக்கவில்லை என்று சாக்குப்போக்கு கூறிக்கொண்டு கொழும்பில் குந்தியிருக்கிறது கண்காணிப்புக்குழு.

அதாவது, அமைதிப் பேச்சிற்குரிய அடிப்படை காரணியான போர்நிறுத்தத்தை சிங்கள அரசு மதித்து நடாக்காத வரை அமைதி வழியில் எதுவும் சாத்தியப்படப் போவதில்லை. அப்படியொரு நிலைக்கு சிங்கள அரசை வர வைப்பதற்கு சர்வதேச நாடுகளின் பொருளாதார அரசியல் அழுத்தங்கள் அவசியம். இறைமையுள்ள நாடு என சிங்கள தேசத்திற்கு முத்திரை குத்த முடியாது ஏனெனில் அது சிங்களவர்களுக்கு மட்டுமே இறைமையுள்ள நாடு. தமிழ் மக்களை பொறுத்தவரை அது ஒரு பயங்கரவாத அரசு. அதாவது ஒரு இரத்தம் தோய்ந்த ஜனநாயக நாடு (Democracy with Blood).

ரோடேசியாவில் (1968) இருந்து சேர்பியா (மென்ரோநீக்குரோ-2006) வரைக்கும் ஒவ்வொரு இனவாத அரசுகள் மீதும் சர்வதேச நாடுகள் விதித்த அரசியல் பொருளாதார அழுத்தங்கள் தான் அந்த நாடுகளில் இனப்போரை முடிவுக்கு கொண்டுவந்தன. சர்வதேசம் இறைமையுள்ள நாடுகள் மீது அழுங்களை போடுவதில்லை போன்றதான தோற்றப்பாட்டை இலங்கை விடயத்தில் கைவிட வேண்டும்.

ஈராக், ஈரான், வடகொரியா, சீனா, சிரியா, யுகோஸ்லாவாக்கியா, ரூவாண்டா, சோமாலியா, சூடான், சிரோலியோன் இவை எல்லாம் இறைமையுள்ள நாடுகள் தான். இவற்றின் மீது பொருளாதார, அரசியல் உட்பட பல்வேறு அழுத்தங்களை ஐ.நாவும், மேற்குலக நாடுகளும் விதிக்கவில்லையா?

பொருளாதார அழுத்தங்கள் அடிமட்ட சிங்களவர் தொடக்கம் மேல்தட்டு சிங்களவர் வரைக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் போது தான். அமைதி தீர்வுக்கு சிங்கள தேசம் உளப்பூர்வமாக சம்மதிக்கும்.

அப்படியரு நிலையை ஏற்படுத்தும் பொறுப்பு சர்வதேசத்தை சார்ந்தது, சர்வதேசத்தை அந்த நிலைக்கு நகர்த்தவும் நாம் செயலாற்ற வேண்டும். மேலும் தமிழ் மக்களும் சிங்கள அரசின் பொருளாதார வளங்களையும், வளர்ச்சியையும் முடக்க வேண்டும். 'சிறுதுளி பெருவெள்ளம் என்று சொல்வார்கள்" அதேபோலவே ஒவ்வொரு தமிழ் மக்களும் செயலாற்ற வேண்டிய நேரம் இது.

ஐப்பசி 18 ஆம் நாள் காலியில் நடந்த தாக்குதல் உல்லாசப்பயணத்துறையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது வீழ்ச்சி அடைந்துள்ள சிங்கள அரசின் சர்வதேச விமானக்கட்டணத்தின் மூலம் உங்களுக்கு தெளிவாக பூ¢யும். நாமும் எந்த எந்த வழிகளில் தமிழ்மக்களின் மூலம் சிங்கள அரசு வருமானத்தை பெறுகின்றது என்பதை அறிந்து கொண்டு தடுத்துநிறுத்த வேண்டும்.

ஏனெனில் சிங்கள அரசு சர்வதேசத்தின் முன்னிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியை ஜெனீவாவில் வைத்து சொல்லியுள்ளது. அதாவது 'மனிதாபிமான (உயிர் வாழ்வதற்குரிய) அடிப்படை வசதிகளைக்கூட தனது அரசியல், படை நலன்களுக்கு அப்பால் விட்டுத்தர சிங்கள அரசோ, பேரினவாத சிங்கள மக்கள் கூட்டமோ தயாரில்லை" என்பது தான்.

எமது படை பலத்தையும், பொருளாதார வளத்தையும் பெருக்கிக்கொண்டு புலிகளுடன் ஒன்றிணைந்து மக்கள் சக்தியாக சிங்களப்படைகளை தோற்கடிப்பதன் மூலம். நாம் தான் ஏ-9 பாதையை திறக்கவேண்டும். அப்போது தான் அது நிரந்தரமாக எப்போதும் யாராலும் மூடப்படாத பாதையாக திகழும்.

சிங்கள அரசின் நீதித்துறையால் பி¡¢க்கப்பட்ட வடக்கையும், கிழக்கையும், படைப்பலத்தால் பிரிக்கப்பட்ட கலாச்சார நகரத்தையும், இதயபூமியான வன்னி மண்ணையும் மக்கள் சக்தி என்னும் பலம் கொண்டு நாம் இணைத்திட வேண்டும்.

அப்படியொரு நிலைவரும்போது சர்வதேசம் எமக்கு பின்னால் அணிவகுக்கும் என்பதுடன் சிங்கள அரசுக்கும் போரிட வலு இருக்கப்போவதில்லை. இது தான் ஜெனீவா எமக்கு சொன்ன அழுத்தமான செய்தி.
-அருஸ் (வேல்ஸ்)-

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

Monday, October 23, 2006

சிங்கள அரசின் இராணுவத்தோல்விகளுக்கு காரணம் என்ன?

இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க புலிகள் பேச்சுக்கு சம்மதித்த அதே சமயம், போர்முனைப்பு கொண்டு அலையும் சிங்கள அரசையும் நிபந்தனையற்ற பேச்சுக்கு அழைத்துவரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் தவறாகாது. இதைத்தான் ஒக்ரோபர் 11 ஆம் நாளுக்குப் பின்னர் நிகழும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

சேர்பிய அரசை பொஸ்னியாவுடன் பேசவைத்து அவர்களுக்குரிய உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக நேட்டோப் படைகள் எவ்வாறு தங்கள் படை நடவடிக்கைகளை தொடர்ந்தார்களோ, அதே போன்றதொரு நிலையில் தான் புலிகள் உள்ளார்கள்.

அதாவது அரசை பேச்சு மேசைக்கு கொண்டுவர மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம், ஆனால் அங்கு மேற்குலகம் பொஸ்னியர்களுக்கு பக்கபலமாக நின்றது. புலிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் தான் அவர்களுக்குப் பலம்.

சிங்கள அரசின் படைபலத்தின் முற்றான வீழ்ச்சி தான் நிரந்தர சமாதானத்தை கொண்டுவரும். இது கடந்த 58 வருட காலத்தில் தமிழ் மக்கள் கண்ட உண்மை.

படை பலத்தின் வீழ்ச்சிக்கு கடற்படையின் முடக்கம் அவசியம். இன்று யாழ். குடாவை இராணுவம் தக்க வைப்பதும் சிங்கள கடற்படையின் இயங்குதன்மையால் தான். ஆனால் சிங்கள கடற்படை இந்த வருடத்தில் சந்தித்த இழப்புக்கள் கணிசமானவை. இந்த வருடத்தில் 04 டோராக்களை (ஆயுதங்கள், ரடார்களுடன் ஓரு படகின் பெறுமதி 500 மில்லியன் ரூபாய்க்கள்) இழந்ததுடன் பெருமளவிலான பயிற்றப்பட்ட மாலுமிகளையும் இழந்திருந்தது.

எனினும் கடற்படையின் முக்கியத்துவத்தையும், திருமலைத் துறைமுகத்தின் அவசியத்தையும் உணர்ந்த சிங்கள அரசு படை நடவடிக்கை மூலம் சம்பூரை கைப்பற்றியது. இது தான் புலிகளின் பலத்தை சிங்களப்படை உரசிப்பார்த்த முக்கிய நிகழ்வு. எந்த கடற்படையை பாதுகாக்க சம்பூரை கைப்பற்றினார்களோ அதே கடற்படையின் பேரழிவு ஆரம்பமாகியது.

16.10.06 அன்று ஹபரணையில் சிங்கள கடற்படையின் தொடரணி ஓய்வெடுக்கும் மையம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் சொற்ப நேரத்தில் சிங்கள கடற்படை சந்தித்த பேரழிவாக வரலாற்றில் பதிவாகிவிட்டது. இங்கு ஆச்சா¢யமான விடயம் என்வெனில், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஓய்வெடுக்கும் பகுதிகள் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. எது ஓய்வு எடுக்கும் பகுதியென பயணமாவதற்கு முதல்நாள் தான் திருமலை கடற்படைத்தள கடற்படைத்தளபதி (கிழக்கு கட்டளைப்பீடம்) முடிவெடுப்பார். ஆனால் இந்த தகவல் தாக்குதலாளிகளுக்கு எப்படிததெரியும் என்பது தான் சிங்கள அரசுக்கு புரியாத புதிராக உள்ளது.

தமது தொலைதொடர்பு உரையாடல்கள் மிக நவீன உபகரணங்கள் மூலம் ஓட்டுகேட்கப்பட்டதா?

கருணா கும்பலின் மூலம் தகவல் அறியப்பட்டதா?

உள்வீட்டு வேலையா? என்பது தான் சிங்களப்படைகளை பீதியில் ஆழ்த்தும் கேள்விகள்.
இந்த தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து கடற்படை மீளமுன்னர் சிங்கள கடற்படையின் தென்பகுதி கட்டளைபீடம் மீது அதிரடித்தாக்குதல் இடியாக வீழ்ந்துள்ளது.

சிங்கள கடற்படையானது இலங்கைத்தீவின் 21,700 கி.மீ நீளமான கடற்கரை பிரதேசத்தையும் நடைபெறும் போரில் அதன் முக்கியத்துவத்தையும் கருதி இலங்கையை சூழ 05 கட்டளைபீடங்களை அமைத்துள்ளது.

கிழக்கு கட்டளைப்பீடம்: இது திருமலை, நிலாவெளி, திரியாய் தளங்களை உள்ளடக்கியது.

வடமத்திய கட்டளைப்பீடம்: இது மன்னார், தலைமன்னார், புனேவா தளங்களை உள்ளடக்கியது.

வடக்கு கட்டளைப்பீடம்: இது காரைநகர், காங்கேசன்துறை, மாதகல், ஊர்காவற்துறை, மண்டைதீவு, புங்குடுதீவு தளங்களை உள்ளடக்கியது.

தெற்கு கட்டளைப்பீடம்: இது காலி, தங்காலை, பூசா தளங்களை உள்ளடக்கியது.

மேற்கு கட்டளைப்பீடம்: இது கொழும்பு, வெலிசறை, கற்பிட்டி தளங்களை உள்ளடக்கியது.
தென்பகுதி கட்டளைப்பீடத்தை பொறுத்தவரை கடற்படையின் துறைமுகமும் பாரிய தளமும் உள்ள பகுதி காலியாகும்.

இந்த துறைமுகத்தை 'தக்சினா" துறைமுகம் என அழைப்பதுண்டு. இரண்டாவது ஈழப்போரில் கடற்படை அழிவுகளை சந்திக்க ஆரம்பித்த போது சிங்கள தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்குடன் காலித்துறைமுகம் பாரிய கடற்படை தளமாக்கப்பட்டது. 1996 இல் புலிகளால் கொழும்பு துறைமுகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட விசேட படை நடவடிக்கையை தொடர்ந்து காலி துறைமுகத்தின் பயன்பாடு மேலும் அதிகரித்தது.

கடற்படையின் பாரிய கப்பல்கள் இங்கு நகர்த்தப்பட்டன. கடற்படைக்குரிய ஆயுத தளபாடங்கள், ஏனைய பொருட்கள் என்பன இங்கு சேமிக்கப்படுவதுடன் இங்கு இருந்தே மற்றைய தளங்களுக்கு விநியோகமும் செய்யப்படுகின்றன. சில சர்வதேச கப்பல்கள் கூட பாதுகாப்புக்கருதி இங்கு நிறுத்தி வைக்கப்பட்டே பின்னர் கொழும்புத்துறைமுகத்திற்கு அனுப்பப்படுவதுண்டு.

திருமலை, மன்னார், கொழும்பு, காங்கேசன்துறை என நான்கு கட்டளைப்பீடங்களும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய போது காலித்துறைமுகத்தின் அவசியம் அதிகரித்தது. எனவே தான் ஆழிப்பேரலையின் போது இத்துறைமுகம் பாரிய அழிவைச்சந்தித்த சமயம் இந்தியாவின் உதவியுடன் அவசர அவசரமாக சிங்கள அரசு அதை புனரமைத்தது. அப்போது அங்கு தரித்து நின்ற 'பராக்கிரமபாகு" கப்பல் மூழ்கிப்போனதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

காலித்துறைமுகத்தின் பாதுகாப்பின் அனுகூலமாக அதைச் சுற்றியுள்ள இனவெறி கொண்ட சிங்கள மக்கள், ஆழமான இந்து சமுத்திரம், கடற்புலிகளின் கற்பிட்டி, முல்லைத்தீவு தளங்களின் தூரம் போன்றவற்றை சிங்களப்படை கருதியது. ஆனால் காற்றுப்புக முடியாத முடியாத இடங்களுக்கெல்லாம் புலி நுழைவது தானே வழமை. 18.10 2006 காலை காலித்துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளானது. பாரிய வெடியோசைகளும், துப்பாக்கிச் சத்தங்களும் இரண்டரை மணிநேரம் தொடர்ந்ததுடன். புகை மண்டலமும் விண்ணை முட்டியது.

ஆரம்பகட்டத் தகவல்களின் படி ஒரு சரக்கு கப்பலும், டோரா ஒன்றும், இரண்டு நீரூந்து விசைப்படகுகளும் அழிந்து போனதுடன் தளத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

சிங்கள அரசு தகவல்களை மூடிமறைத்தாலும் தளத்தில் இருந்து எழுந்த புகைமண்டலத்தை மறைக்க முடியவில்லை. உடுத்த உடைகளுடன் ஓடிய கடற்படை சிப்பாய்களை கண்ணுற்ற மக்கள் பீதியடைந்து வீடுகளுக்குள் முடங்கியதும், இரண்டு மணிநேரம் காலி நகரை அதிரவைத்த வெடியோசைகளும் தாக்குதலின் உக்கிரத்தை சொல்லியுள்ளது.

அதாவது சிங்கள தேசத்தின் அனைத்துப் பகுதிகளும் தாக்குதல் எல்லைக்குள் வீழ்ந்துள்ளதாகவே கொள்ளமுடியும். 'எங்களுக்கு அவலத்தை தந்துவிட்டு எந்த ஒரு மூலையிலும் நீ நிம்மதியாக இருக்கமுடியாது" என்பது தான் இந்த தாக்குதல் எதிரிக்கு உணர்த்தும் ஒரு வாரச்செய்தி. அதாவது சிங்கள அரசின் கடற்படையின் ஐந்து கட்டளைப்பீடங்களும் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றன என்பதும் இங்கு முக்கியமானது.

அரசைப் பொறுத்த வரையில் அண்மைய தாக்குதல்கள் பா¡¢ய பொருளதார உயிர் அழிவுகளை கொடுத்ததுடன், படையினரினதும், சிங்கள மக்களினதும் மனவுறுதியையும் சிதைத்துள்ளது. உடைந்து போகும் படையினரது மனவுறுதி, சர்வதேசத்தில் ஏற்படும் அவமானம், சிங்கள மக்களிடம் போர் தொடர்பாக மாற்றமடையப்போகும் கருத்துக்கள் என்பவற்றை எண்ணியே சிங்கள அரசு தற்போதைய தாக்குதல் செய்திகளை இருட்டடிப்புச் செய்ய முனைகின்றது.

கடந்த இரண்டு வாரங்களில் சிங்கள அரசின் முப்படைகளும் சந்தித்த பொருளாதார இழப்புக்கள் மிகப் பாரியவை. ஏறத்தாழ 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆயுதங்களை முகமாலையில் இராணுவம் இழந்த பின்னர், 220 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிபீர் விமானத்தை விமானப்படை நீர்கொழும்பில் இழந்தது. தற்போது கடற்படையின் இழப்பும் பல நூறு மில்லியன் ரூபாய்க்களை தாண்டிவிடும் என்பதுடன் உல்லாசப்பயணத்துறை அன்னிய முதலீடு என்பவற்றிலும் காலித்துறைமுக தாக்குதல் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆள், ஆயுத, பொருளாதர இழப்புக்களுக்கு அப்பால் மகிந்தவின் அரசியல் காய் நகர்த்தல்களும், மகிந்த சிந்தனையும் தென்னிலங்கையில் கேலிப் பொருளாகப்போகின்றன. தமிழ் மக்களின் மீதான இன அழிப்பு எனும் ஆயுதத்தை தனது அரசியல் அபிலாசைகளுக்காக கையில் எடுத்த மகிந்த தற்போது அதனால் தாக்குண்டு செயலிழந்து நிற்கிறார். இது ஒன்றும் புதியன அல்ல. சந்தி¡¢க்கா 1999 இல் அரசியல் அரங்கில் வெறுங்கையுடன் நின்றதும் அதனால் தான். ஆனால் அந்த வரலாற்றை எல்லாம் மகிந்த மறந்துவிட்டார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

2001 இல் அந்தரத்தில் தொங்கிய இராணுவச் சமவலு தற்போது புலிகளின் பக்கம் சரிந்துவிட்டதாகவே தோன்றுகின்றது. இதற்கு ஆதாரமாக பின்வரும் சில கருத்துக்களை முன்வைக்கலாம்.

2001 இல் 72 மணிநேர தீச்சுவாலை நடவடிக்கையில் சந்தித்த இழப்பின் அரைப்பங்கு படையினரை இரண்டரை மணிச்சமரில் முகமாலையில் இழந்ததுடன், தீச்சுவாலையில் இழந்ததை விட அதிகளவு கவச வாகனங்களையும்; சிங்களப்படை இழந்துள்ளது.

அண்மைய தாக்குதல்கள் தொடர்பான அரசின் புலனாய்வுப் பிரிவு சந்தித்த தோல்விகள் (புலனாய்வுப்பிரிவின் முடக்கம்).

புலிகளின் பின்னால் அணிதிரண்ட மக்கள் படையும், போர் எழுச்சி பெற்ற தேசமும்.

படிப்படியாக செயலிழந்து போகும் கடற்படையும் அதன் இயங்கு தன்மையும்.

இலங்கைத்தீவு முழுவதும் விரிந்து போயுள்ள போர் அபாயம்.

மிகவும் வலுவான புலிகளின் விசேட படையணிகளும், வலுக்குன்றிப்போன அரசின் 53 ஆவது படையணியும்.
சிங்கள அரசின் தொடர்ச்சியான இராணுவத் தோல்விகளுக்கும் புலிகளின் இராணுவ வல்லமைக்கும் காரணம் என்ன? ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன போரியல் மேதையான சன் சூ (Sun Tzu) கூறிய கருத்து தான் இக்கோள்விக்குரிய பதிலாக அமையும்.

அதாவது,

'உன்னையும் எதிரியையும் நீ அறிந்திருந்தால் நூறு சமர்களிலும்; நீ பயமின்றி வெற்றியீட்டலாம்"

'உன்னை மட்டுமே நீ அறிந்திருந்தால்; ஒவ்வொரு வெற்றிக்கும் நீ அதிகம் இழந்திருப்பாய்"

'உன்னையும் எதிரியையும் நீ அறியாவிட்டால் ஒவ்வொரு சமரையும் நீ இழந்து விடுவாய்"

இந்த அடிப்படை போரியல் தத்துவத்தை உணராத சிங்கள தேசத்திற்கு மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கத்தான் போகின்றன.
-அருஸ் (வேல்ஸ்)-

நன்றி: தமிழ்நாதம்

Saturday, October 21, 2006

கொழும்பில் கடத்தப்பட்ட 3 தமிழர்கள் சுட்டுக் கொலை

கொழும்பில் வெள்ளை வான் குழுவினரால் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மகரகம பகுதியில் மத்தேகொட வீடமைப்புத் திட்டத்தில் வசித்து வந்த டேவிட் விக்னேஸ்வரன்(வயது 35) மற்றும் அவரது மனைவி திருக்கேஸ்வரி விக்னேஸ்வரன் (வயது 30) ஆகியோர் கடந்த வியாழக்கிழமை (19 ஒக்டோபர் 2006) அதிகாலை 1 மணிக்கு கடத்திச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் காலை 6 மணியளவில் இருவரது உடல்களும் பிலியந்தல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில் கொழும்பு அளுத்மாவத்த பகுதியில் ரெஜி பாலநாதன் (வயது 30) என்பவர் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கடத்தப்பட்டார். அவரது உடல் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ராகம-வல்பொல பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்டது.

மக்கள் கண்காணிப்புக் குழு தலைவர் சிறிதுங்க ஜயசூர்ய, மனோ கணேசன் உள்ளிட்டோர் சம்பவ இடங்களுக்குச் சென்று உடல்களை அடையாளம் காட்டினர்.

கடந்த இரு நாட்களில் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான ஜெயராஜா (வயது 46), மோதர பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரதீபன் (வயது 25) மற்றும் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த மாணவரான சான் ஜோர்ஜ் (வயது 15) ஆகியோர் கடத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் கடந்த சில வாரங்களில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள்தாகவும் 33 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுத்த பின்னர் 9 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கடத்தல் மற்றும் படுகொலைகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க பொதுமக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த சிறிதுங்க ஜயசூர்ய, மனோ கணேசன் மற்றும் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நன்றி: புதினம் [சனிக்கிழமை, 21 ஒக்ரொபர் 2006]

Thursday, October 19, 2006

கிஃபீரை வீழ்த்தியது புலிகளின் ஏவுகணையா?

கிழக்கில் பனிச்சங்கேணியில் ஆரம்பித்த சமர் முகமாலையில் உக்கிரமடைந்து, ஹபரணையில் தாவி நீர்கொழும்பு வாவியில் தற்போது சங்கமமாகியுள்ளது.

இந்த சமரில் சிங்கள அரசின் முப்படைகளும் பேரழிவை சந்தித்துள்ளன. சிங்கள அரசின் தரைப்படையின் போரிடும் கூர்முனை என வர்ணிக்கப்படும் 53 ஆவது படைப்பிரிவு முகமாலையில் தனது ஒரு பிரிகேட்டின் முக்கால் பங்கை இழந்ததுடன் ஒரு டசின் கவச வாகனங்களையும் இழந்துள்ளது.

கடலிலே நூறு இருநூறு புலிகளை அடிக்கடி கொன்று குவிப்பதாக தம்பட்டம் அடிக்கும் கடற்படை கடந்த திங்கட்கிழமை (16.10.06) ஹபரணையில் நடந்த பாரிய குண்டு வெடிப்பில் சின்னாபின்னமாகியுள்ளது. இந்த கட்டுரை எழுதும் போதும் சடலங்கள் தேடப்படுகின்றன. 116 பேர் இறந்ததாகவும், 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

ஹபரணை குண்டு வெடிப்புக்கு தமிழ் மக்கள் மீது பழி தீர்க்கவென புறப்பட்ட சிங்கள வான்படையின் கிபீர் விமானங்கள் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பில் அப்பாவி மக்களின் மீது குண்டுத்தாக்குதலை நடாத்தி விட்டு திரும்பிய வேளை அவற்றில் ஒரு கிபீர் விமானம் நீர்கொழும்பு கடலில் வீழ்ந்து நொருங்கிபோனது.

தென்னிலங்கை எங்கும் மரண ஓலங்கள் எழுகின்றன. சிங்கள நண்பர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தன்னை பீதி சூழ்ந்துள்ளதாக கூறியுள்ளார். எமக்கு வலியை தந்தவன் தற்போது அதன் வேதனையை உணருகிறான்.

கிபீர் சிங்களப் படைகள் பெரிதும் நம்பியிருந்த இயந்திரப்பறவை, கடந்த சித்திரைக்கு பின்னர் தமிழ் மக்களின் மீதும் அவர்களின் வாழ்விடங்களின் மீதும் 40 இற்கும் மேற்பட்ட தடவை தொன் கணக்கில் குண்டுகளை கொட்டியுள்ளது. வல்லிபுனத்தில் 61 அப்பாவி மாணவிகளை கொன்றதும் இந்த விமானம் தான்.

1972 இல் பிரான்ஸ் நாட்டின் மிராச்-V விமானத்தின் பிரதி வடிவமாக இஸ்ரேலினால் தயாரிக்கப்பட்ட முதல் சண்டை விமானம் தான் கிபீர். கிபீர் என்றால் lions club என்பது அர்த்தம். அவற்றில் கிபீர்-C1, கிபீர்-C2, கிபீர்-C7, கிபீர்-C10 ஆகிய வடிவங்கள் உள்ளன. அதன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதாவது கிபீர்-c1 மிகவும் பழமையானது கிபீர்-c10 மிகவும் நவீனமானது. சிங்கள அரசிடம் தற்போது 12 கிபீர் விமானங்கள் உள்ளன. அதில் தற்போது நொருங்கிப்போனதை கழித்தால் 11 விமானங்கள் எஞ்சியுள்ளன.

கிபீர் பற்றிய சில தரவுகள்.

ஓற்றை இருக்கையுள்ள பலநோக்கு தாக்குதல் விமானம்.
நீளம் - 15.55 மீ., அகலம்- 8.22 மீ., உயரம்- 4.25 மீ.
வேகம் - 2,285 கிமீ/மணி
பறக்கும் உயரம்- 18,000 மீ.
தூரம்- 1,300 கி.மீ
இயந்திரம் - General Electric J79-GE-17 jet engine.
ஆயுதங்கள் - 30 மி.மீ. பீரங்கிகள் - 02 (2x Rafael-built DEFA 553 30-mm cannons with 140 rounds per gun), 6,065 கிலோ நிறையுள்ள குண்டுகளையும் (Mk-82, GBU-13 LGB, TAL-1 and TAL-2 CBUs, BLU-107 Durandal, HOBOS) காவ வல்லது. இவை தவிர விண்ணில் இருந்து தரைக்கு பாயும், ஆகாயத்தில் இருந்து ஆகாயத்திற்கு பாயும்(Shrike ARMs; Maverick ASMS, Sidewinder, Shafrir, and Python-series AAMs) ஏவுகணைகளையும் உடையது.

பாவனையில் உள்ள நாடுகள் - அமெரிக்கா, இஸ்ரேல், கொலம்பியா, ஈகுடோர், சிறிலங்கா.
கிபீர் விமானமும் அதன் ஆயுதங்களும்.

1995 ஆம் ஆண்டு சிங்கள அரசு 06 கிபீர்-c2, 01 கிபீர்-TC2 என்பவற்றை கொள்வனவு செய்தது. பின்னர் 2001 ஆம் ஆண்டு 04 கிபீர்-C2, 04 கிபீர்-C7 களையும் கொள்வனவு செய்தது. தற்போது சிங்கள வான்படையிடம் 02 கிபீர்-TC2, 02 கிபீர்-C7, 08 கிபீர்-C2 என்பன உண்டு.

ஓவ்வொன்றும் 2.2 மில்லியன் அமொ¢க்க டொலர் (220 மில்லியன் ரூபாய்கள்) பெறுமதியான இந்த விமானங்களில் இது சிங்கள வான்படை இழந்த 06 ஆவது கிபீர் விமானமாகும்.

21.01.1997 - 01 கிபீர் C2 நீர்கொழும்பு வாவியில் வீழ்ந்தது.
24.07.2001 - 03 கிபீர் C2, C7 விமானங்கள் கட்டுநாயக்கா தாக்குதலில் அழிந்துபோயின.
22.10.2002 - 01 கிபீர் C-7 கட்டுநாயக்காவில் வீழ்ந்தது.
16.10.2006 - 01 கிபீர் C-2 நீர்கொழும்பு வாவியில் வீழ்ந்தது.

1978 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 7 ஆம் நாள் விடுதலைப் புலிகளால் பலாலியில் இருந்து கட்டுநாயக்காவிற்கு சென்ற சிங்கள அரசின் அவ்ரோ விமானம் நேரக்கணிப்பு குண்டு மூலம் தகர்க்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை சிங்களப்படை ஏறத்தாழ 50 இற்கும் மேற்பட்ட விமானங்களை இழந்துள்ளது.

இவற்றில் 40 இற்கும் மேற்பட்ட விமானங்கள் புலிகளின் தாக்குதலால் அழிந்து போனவை. அதிலும் புலிகளின் லெப். கேணல் ராதா வான்காப்பு படையணியினதும், விசேட படையினதும் தாக்குதல்களினால் அழிந்தவை தான் அதிகம். இரண்டு பரல் கொண்ட 20 மி.மீ ஒலிகன் துப்பாக்கி, சாம்-7, ஸ்ரிங்கர், இக்லா ஏவுகணைகள் என்பவை புலிகளின் பிரதான விமான எதிர்ப்பு ஆயுதங்கள்.

SAM ஏவுகணைகள் மூலம் கிபீரை வீழ்த்த முடியுமா? 1993 ஆம் ஆண்டு சோமாலியாவில் நடந்த சமரில் கெரில்லாக்கள் SAM-7 ஏவுகணை மூலம் அமெரிக்காவின் F-16s விமானத்தை வீழ்த்தியிருந்தனர். இந்த விமானம் இஸ்ரேலின் கிபீர் விமானத்தை விட மிக நவீனமானது. எனவே கிபீரை இலகுவாக வீழ்த்த முடியும்.

உலகில் மிகக்குறைவான நாடுகளே கிபீர் விமானத்தை பயன்படுத்துவதால் அதன் இழப்புக்கள் மிகக்குறைவு. 1970 களில் சிரியாவின் மிக் விமானத்தினால் ஒரு கிபீர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட இன்றைய போர்களில் கிபீரை பயன்படுத்துவதில்லை.

தற்போது மக்களின் மனங்களின் எழும் கேள்வி நீர்கொழும்பில் வீழ்ந்த கிபீர் விமானம் புலிகளின் தாக்குதலால் வீழ்ந்திருக்கலாமா? என்பது தான். இதை மறுக்க முடியாது ஏனெனில் தாம் தாக்கப்படும் களங்களில் அதிக உயரத்திற்கு பறக்கும் விமானங்கள் (அதாவது ஏவுகணைகளின் தூர வீச்சிற்கு அப்பால்) பாதுகாப்பான பிரதேசங்களுக்கு (சிங்களப் பகுதிகள்) மேல் பறக்கும் போதும், விமானத்தளங்களை அண்டிய பகுதிகளிலும் தாழ்வாக பறப்பதுண்டு.

எனவே அவற்றை அத்தகைய இடங்களில் வைத்து மிக சுலபமாக ஏவுகணைக்கு இரையாக்கி விடலாம்.
உதாரணமாக 2000 ஆண்டு மாசி மாதம் அனுராதபுரத்தில் தலவா பகுதியில் பலாலியில் இருந்து படையினரை ஏற்றிச்சென்ற அன்ரனோவ் - 24 ரக விமானம் 04 உக்ரைன் நாட்டு விமானிகள் உட்பட 36 படையினருடன் வீழ்ந்து நொருங்கியது.

உடனடியாக இயந்திரக்கோளாறு எனக்கூறிய சிங்கள அரசு. விசாரனையின் பின்னர் திகைத்துப்போனது. உக்கிரைனில் இருந்து வந்த நிபுணர்கள் குழு விமானம் இக்லா (SA-16 GIMLET Igla-1 9K310) ரக தரையில் இருந்து விண்ணுக்கு பாயும் ஏவுகணையினாலேயே வீழ்ந்ததாக கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்.

காடுகளின் ஊடாக ஏவகணையுடன் நகர்ந்த புலிகளின் விசேட படையணி விமானத்தை வீழ்த்திவிட்டு தளம் திரும்பிவிட்டார்கள். இது ஓரு விசேட நடவடிக்கை. அதாவது கிபீருக்கும் அதே நிலமை ஏற்பட்டு இருக்கலாம் என்பது தான் தற்போதைய கருத்து. நீங்கள் நினைக்கலாம் அடித்த ஏவுகணையின் ஏவும் பகுதியை எப்படி புலிகள் கொழும்பில் இருந்து தளத்திற்கு கொண்டு வருவார்கள் என்று (ஏவுகணை மிக அதிக பெறுமதியானது).

பொதுவாக அமெரிக்காவின் ஆயுதங்களுக்கும் சோவியத்தின் ஆயுதங்களுக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. அதாவது அமெரிக்காவின் போர் வீரர்களால் காவிச்செல்லப்படும் (Man-Portable) கனரக ஆயுதங்கள் பாவித்த பின்னர் மீண்டும் பாவிக்க முடியாதவை (fire-and-forget) சோவியத்தின் ஆயுதங்கள் மீண்டும் மீண்டும் பாவிக்கக்கூடியவை.

உதாரணமாக சோவியத்தின் டாங்கி எதிர்ப்பு ஆயுதமான RPG மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. ஆனால் அமெரிக்காவின் அதை ஒத்த டாங்கி எதிர்ப்பு ஆயுதமான LAW (Light Anti-Tank Weapon) ஒருமுறை பயன்படுத்தி விட்டு எறியக்கூடியது. அதாவது அமெரிக்கா முழுக்க முழுக்க விசேட படை நடவடிக்கையை முதன்மைப்படுத்தியே ஆயுதங்களை தயாரிப்பதுண்டு. உலகிலே அதிக விசேட படை அணிப்பிரிவுகளை உடைய நாடும் அமெரிக்கா தான். அமெரிக்காவின் வெற்றியின் இரகசியமும் அது தான்.

விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பார்ப்போமாயின் சோவியத்தின் SAM இது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது. ஆனால் அமொ¢க்காவின் ஸ்ரின்ஞர் (FIM-92A Stinger) ஏவுகணை ஒரு தடவை மட்டுமே பயன்படத்தக்கூடியது. விசேட படை நடவடிக்கைக்கு மிகச்சிறப்பான ஆயுதம். அதாவது நீர்கொழும்பின் ஒரு மூலையில் நின்று ஏவுகணையை ஏவிவிட்டு அதன் வெற்றுக்கூட்டை வாவியில் எறிந்துவிட்டு அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு பேரூந்தில் எறிப்போக வேண்டியது தான்.
தங்கள் மீது ஒரு பெரிய தாக்குதல் நடந்தால் தமிழ் மக்கள் மீது பழிதீர்க்க நிச்சயமாக சிங்கள விமானப்படை புறப்பட்டு வரும் என்பது ஒரு சிறு குழந்தைக்கும் தெரியும். எனவே கட்டுநாயக்காவிற்கு அண்மையில் நாட்கணக்கில் ஏவுகணையுடன் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. ஹபரணைத் தாக்குதல் நிகழ்ந்து 4 மணி நேரத்திற்குள் விமானம் சிக்கிவிட்டது.

சிங்கள அரசை பொறுத்த வரையில் இந்த இரண்டு வாரத்திலும் நிகழ்ந்த அதிர்ச்சிகளால் அசைவின்றி உறைந்து போயுள்ளது. எனவே போர் விமானம் வீழ்ந்ததற்கான உண்மையான காரணங்களை தற்போது கூறப்போவதில்லை.

உண்மை தெரிந்தால் எதிர்க்கட்சிகள் அரசை விடப்போவதும் இல்லை. மேலும் மகிந்த ஏறிய விமானம் ஒரு வாரத்திற்குள் சாம்பலாகும் என மகிந்தவோ அவரது கூட்டமோ எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள்.
எனினும் இறுமாப்புடன் வந்து எம்மீதும், எமது பள்ளிப்பிஞ்சுகள் மீதும் குண்டு விசிய எதிரிக்கு அவனது இடத்தில் வைத்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.

பேச்சுவார்த்தைக்கு என இணைத்தலைமை நாடுகள் குறித்த நாட்களுக்கு இன்றுடன் இரு வாரங்கள் தான் உள்ள நிலையில் மகிந்தவின் இராணுவ மேலாதிக்கக் கனவு தவிடுபொடியாகியுள்ளது. மாறாக புலிகளின் இராணுவப் பலம் அரசைவிட உயர்ந்துள்ளது என்பது தான் கள யதார்த்தம்.

எனவே நிழல்போர் நிஜப்போராகும் போது சிங்களப்படைக்கு பேரழிவை ஏற்படுத்த எமது படைபலத்தை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதுடன் எல்லோரும் ஒண்றிணைய வேண்டிய வேளையும் இது தான்.
-அருஸ் (வேல்ஸ்)-

நன்றி: தமிழ்நாதம்

Monday, October 16, 2006

கிஃபீர் விமானம் கொழும்பில் விழுந்து நொருங்கியது

சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானம் கொழும்பு புறநகர் பகுதியில் இன்று 16 ஒக்டோபர் 2006 விழுந்து நொறுங்கியது.

"நீர்கொழும்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது. இது தாக்குதலினால் வீழ்ந்ததா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்துகிறோம்" என்று விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

நன்றி: புதினம்

Sunday, October 15, 2006

விடுதலைப்போரின் அடுத்த கட்டம் ஆரம்பமாகப்போகிறது

இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது. அதன் வெளிப்பாடுகள் தான் பேச்சு ஆரம்பிக்க முன் ஹேகலிய ரம்புக்வெல புலிகளுக்கு விதித்த மூன்று நிபந்தனைகள். ஆனால் பின்னர் தான் நிபந்தனைகள் விதிக்கவில்லை என கரணமும் அடித்திருந்தார்.

சர்வதேச நாடுகளின் உதவித்தொகையில் சீவியம் நடத்தும் சிங்கள அரசுக்கு என்று தனியான கொள்கைகள் ஏதும் இருக்க முடியுமா? அது தான் ரம்புக்வெலவின் குத்துக்கரணத்திற்கு காரணம். ரம்புக்வெல நிபந்தனை விதித்ததன் அர்த்தம் என்ன? தாம் பலமாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் முயற்சி. அதாவது மாவிலாறு, சம்பூர் ஆக்கிரமிப்புக்கள் இராணுவத்திற்கு மிகப்பெரும் பலத்தை கொடுத்தவிட்டது போன்றும், புலிகள் பெரும் அழிவை சந்தித்து விட்டார்கள் போன்றதுமான கற்பனை.

பொதுவாக உலகில் போரில் வென்ற நாடுகள் அல்லது பலத்தில் மேலோங்கிய நாடுகள் தான் பலவீனமான நாடுகள் மீது நிபந்தனைகளை விதிப்பதுண்டு. சிங்கள அரசின் கற்பனையும் அது தான். அது மட்டுமல்லாது தான் தோன்றித்தனமான விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்கள் மீதான படுகொலைகள் என அரச பயங்கரவாதமும் கட்டுக்கடங்கவில்லை.

புலிகள் இது தொடர்பாக பல தடவைகள் சர்வதேசத்திற்கும், நோர்வேக்கும், கண்காணிப்புக்குழுவிற்கும் கூறிவிட்டார்கள். ஆனால் எதுவுமே போர் வெறிகொண்ட அரசின் காதில் ஏறியதாக இல்லை. அரசு தனது அரசியல் தோல்விகளை மறைக்க தமிழ் மக்களின் மீதான இன அழிப்பு போரை முனைப்பாக்க முயன்றது. அதற்காக எதிர்வரும் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவை 139.5 பில்லியன் ரூபாய்களாக உயர்த்தியதுடன், கனரக ஆயுதங்களும் வாங்கி குவிக்கப்படுகின்றன.

படையினரதும், சிங்கள மக்களினதும் மனவலுவை அதிகா¢க்கும் முயற்சியில் அரசுத் தலைவர் முதல் அடிமட்ட சிங்கள அதிகா¡¢கள் வரை ஈடுபட்டுள்ளார்கள். அதன் ஓரங்கமே ஐப்பசி 10 ஆம் நாள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கிபீர் விமானத்திலும் ஏறி சிங்கள மக்களுக்கு வலுவுட்டியுள்ளார். அண்மைக்காலமாக விமானப்படை விமானங்கள் நடாத்தும் தாக்குதல்களால் தான் புலிகள் பெரும் தாக்கு¡தல்களில் ஈடுபடவில்லை என்பது சிங்கள அரசின் கணக்கு. எனவே தான் 20 வருடங்களின் பின் ஜனாதிபதி ஒருவர் விமானப்படைத்தளத்திற்கு விஜயம் செய்ததுடன் போர்விமானத்திலும் ஏறிவிளையாடியுள்ளார்.

இந்த வீர விளையாட்டுக்களின் தொடர்ச்சியாக பெரும் தாக்குதல்ளை நிகழ்த்தி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சில பிரதேசங்களை கைப்பற்றிவிட்டு ஜெனிவாவிற்கு செல்வது அல்லது இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளுக்கு ஆத்திரமூட்டி பேச்சுக்களில் இருந்து அவர்களை விலக வைப்பது தான் அரசின் தந்திரம். அதற்காக அரசு கிழக்கில் ஒன்று, வடக்கில் ஒன்றாக இரு களமுனைகளை தொ¢வு செய்தது. கிழக்கில் வாகரையை ஆக்கிரமிக்கும் முயற்சியாக பனிச்சங்கேணியை கைப்பற்றுதல், வடக்கில் ஆனையிறவை கைப்பற்றுவதற்கு ஏதுவான முதற்படியாக பளையை கைப்பற்றுதல்.

பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு, கருணா குழு உறுப்பினர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. கடுமையான ஆட்டிலறி, பல்குழல் எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்களுடன் இராணுவ மேஜர் தலைமையில் 400 இராணுவத்தினரும், 75 கருணா குழு உறுப்பினர்களும் மாங்கேணி படைமுகாமில் இருந்து நகர்வை ஆரம்பித்தனர். இவர்களுக்கு உதவியாக கடற்படையும் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் தான் பெருமளவான கருணா குழு உறுப்பினர்களை முதல் முறையாக இராணுவம் பயன்படுத்தி உள்ளது. இது இரு நோக்கங்களை கொண்டது.

அதாவது பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட கருணா குழு உறுப்பினர்களுக்கு ஒரு பயிற்சி களமாக பனிச்சங்கேணித்தாக்குதலை ஏற்படுத்துதல்.

பனிச்சங்கேணி கைப்பற்றப்பட்டால் கருணா குழு கிழக்கை மீட்கத்தொடங்கி விட்டார்கள் என பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது. ஆனால் தந்திரமாக இவர்களை உள்வாங்கிய புலிகள் ஒரு பெட்டி வடிவில் முற்றுகையிட்டு தாக்கத்தொடங்கினார்கள்.

புலிகளின் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த தளபதி கேணல் சொர்ணம் வழிநடத்த உக்கிரமான எதிர்ச்சமர் ஆரம்பித்தது.

சிங்களப்படைக்கும் தமிழ் துரோகக்கும்பலுக்கும் நின்று நிதானித்து சமரை எதிர்கொள்ள நேரம் இருக்கவில்லை. வாகனங்கள், ஆயுதங்கள், இறந்த, காயமடைந்த சகாக்களையும் விட்டுவிட்டு முகாமுக்கு பின்வாங்கி ஓடிவிட்டார்கள். 30 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும், 20 இற்கு மேற்பட்ட கருணா குழுவினரும் பலியானதுடன் 75 பேர் வரை காயமடைந்தார்கள். இந்த மோதலில் தாக்குதலுக்கு தலைமை தாங்கி வந்த மேஜரும் பலியாகிவிட்டார். இராணுவ வாகனங்கள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டது. இதில் கைப்பற்றப்பட்ட 81 மி.மீ மோட்டார்கள் 2 உம் அவற்றிற்கான எறிகணைகளும் முக்கியமானவை.

இராணுவத்தின் 11 உடல்களும், கருணா கும்பலின் 06 உடல்களும் கைப்பற்றப்பட்டதுடன் ஒரு சிப்பாயும் கைது செய்யப்பட்டார். போர்நிறுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் தெற்கில் அரச படைகள் வலுவுள்ளவர்கள் என ஏற்படுத்தப்பட்ட தோற்றப்பாடு பனிச்சங்கேணி தாக்குதல் மூலம் கலைந்து போகாமல் தடுப்பதற்கு அரசும் தென்பகுதி ஊடகங்களும் மிகவும் திட்டமிட்டு செயற்பட்டனர். தாக்குதலை இருட்டடிப்பு செய்ய முயன்றனர், கருணா குழு தாக்கியதாக செய்தி பரப்ப முனைந்தனர் ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை.

எனவே தான் இறந்த சிங்களப் படைகளின் உடல்களை கூட புதைத்து மீண்டும் தோண்டி எடுத்து கையளிக்க வேண்டிய நிலை புலிகளுக்கு ஏற்பட்டது. இறந்த படையினரின் உடல்களை விட தமது அரசியல் நலன்கள் தான் தற்போது சிங்கள இனவாதிகளுக்கு முக்கியமானது. அதற்கு ஒத்திசைவாகவே தென்பகுதி ஊடகங்களும் செயற்பட்டிருந்தன.

கிழக்கில் ஏற்பட்ட தோல்வியையும் வடக்கில் சரி செய்து விடலாம் என எண்ணிய அரசு பளையை கைப்பற்றும் நடவடிக்கைக்கு நாள் குறித்தது. ஓகஸ்ட் 11 ஆம் நாள் படையினர் புலிகள் மீது ஒரு வலிந்த தாக்குதலுக்கு ஆயத்தமான வேளை முகமாலை முன்னரங்கை புலிகள் உடறுத்து தாக்கி இருந்தார்கள். அதற்கு பதிலடியாக ஒக்ரோபர் 11 ஆம் நாளை தனது தாக்குதலுக்கு அரசு தெரிவு செய்தது. இந்த நாளில் மற்றும் ஒரு விசேடம் உண்டு. அதற்கு முதல் நாள் தான் சிங்கள இராணுவத்தின் 57 ஆவது ஆண்டுவிழா.

2001 இல் தீச்சுவாலை நடவடிக்கையின் போது படையினர் நகர்ந்த அதே பாதையால் இம்முறையும் நடவடிக்கை ஆரம்பமானது. செறிவான ஆட்டிலறி, பல்குழல் எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்களுடன் சிங்களப்படையின் படைப்பி¡¢வுகள் நகர்ந்தன. புலிகளை பொறுத்தவரை இராணுவத்தின் இந்த நகர்வை முன்கூட்டியே கணித்திருந்தனர். அதை எதிர்கொள்ள வியூகங்களை வகுத்ததுடன் கேணல் கிட்டு ஆட்டிலறி படைப்பி¡¢வுத்தளபதி கேணல் பாணுவும் வடபோர்முனைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நாகர்கோவில் அச்சில் முன்னேறிய படைகள் சிறிது நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், முகமாலை, கிளாலி ஊடாக முன்னேறிய படைகள் புலிகளின் முன்னணி நிலைக்கு உள்வாங்கப்பட்டார்கள். தமது இரண்டாவது நிலைக்கு தந்திரமாக பின்னகர்ந்த புலிகளின் அணிகள் இராணுவத்தை சுற்றிவளைத்து தாக்கத் தொடங்கினார்கள். துல்லியமானதும், மிகச்செறிவானதுமான மோட்டார், ஆட்டிலறித்தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத படையினர் சிதறி கண்ணிவெடி வயல்களின் ஊடாக ஓடியுள்ளார்கள். அதுவே இராணுவத்தின் பேரழிவுக்கு காரணமாக அமைந்தது.

படையினருக்கு உதவியாக வந்த டாங்கிகளும் தப்பவில்லை இரண்டு வு-55 ரக பிரதான போர் டாங்கிகள் முற்றாக அழிக்கப்பட்டதுடன், மேலும் இரு டாங்கிகள் சேதமடைந்தன. ஐந்து மணிநேரத்தில் முடிந்து போன சமரில், 200 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட, 515 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 75 சடலங்களையும் நூற்றிற்கும் மேற்பட்ட ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியதுடன், ஒரு சிப்பாயும் கைது செய்யப்பட்டார். இவர் சத்தமின்றி நடைபெறும் நாலாம் கட்ட ஈழப்போ¡¢ல் வடபகுதியில் கைதான முதல் சிப்பாய். முன்னர் கிழக்கில் வாகனேரி, பனிச்சங்கேணி தாக்குதல்களில் தலா ஒவ்வொரு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே.

முகமாலை சமரில் கனரக ஆயுதங்களின் நேர்த்தியான கையாளுகையும், தளபதிகளின் சிறந்த போர்க்கள நுட்பமும், கனரக ஆயுதங்களின் ஓருங்கிணைந்த பயன்பாடும் புலிகளின் வெற்றிக்கு காரணமாகியதுடன். அவர்களின் இழப்புக்களையும் வெகுவாகக் குறைத்துள்ளது. 4 துணைப்படையினரும், 18 போராளிகளும் வீரச்சாவைத் தழுவியிருந்தனர். இது ஏனைய சமர்களுடன் ஒப்பிடும் போது குறைவானது.

2000 இல் ஆனையிறவை இழந்த பின்னர் சிங்களப்படை அதை மீட்பதற்கு கொடுக்கும் விலைகள் மிக, மிக அதிகம். தற்போது தென்னிலங்கையைப் பெறுத்தவரை ஆனையிறவு இராணுவ முக்கியத்துவத்தை விட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே மாறியுள்ளது. இரு மரபுவழிப் படைகள் தமது பலத்தை சரிபார்க்கும் களமாக அமைந்துள்ளது என்றாலும் தவறில்லை.


இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் முயற்சியில் இதுவரை ஏறத்தாள 1,100 படையினர் பலியானதுடன் 3,700 படையினர் காயமடைந்தும் உள்ளார்கள். இது அண்ணளவாக சிங்களப்படையினரின் ஒரு டிவிசன் படையினரின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கைக்கு ஒப்பானது. புலிகளை பொறுத்தவரையில் தீச்சுவாலையில் 141 வீரர்களை இழந்திருந்தனர். அதற்கு பின்னரான அண்மைய சமர்களையும் சேர்த்தால் ஏறத்தாள 250 வீரர்களே வீரமரணமடைந்துள்ளனர்.

அதாவது சிங்களப்படைகளின் கொல்களமாக நாகர்கோவில், முகமாலை, கிளாலி அச்சு அமைந்துள்ளது என்றால் மறுக்கமுடியாது. யாழ். குடாவில் நிலைகொண்டுள்ள சிங்களப்படைகளின் பெரும் படைபலம் இந்த அச்சிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தான் செறிவாக்கப்பட்டுள்ளது. இங்கு சிங்களப்படை சந்திக்கும் இழப்புக்கள் அதன் பின்தளங்களின் பாதுகாப்பையும் பலத்தையும் ஆட்டம் காண வைக்கும் என்றால் தவறில்லை.

2002 இற்கு முதல் நடைபெற்ற சமர்களுக்கும், தற்போது நடைபெறும் சமர்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. தற்போது நடைபெறும் சமர்களை கண்காணிப்புக்குழுவும் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானிப்பதுடன். கண்காணிப்புகுழு மூலம் உண்மையான களநிலவரம் உடனுக்குடன் உலகை எட்டிவிடும். அதாவது சிங்கள அரசின் பொய்யும் புரட்டும் உடனுக்குடன் அம்பலமாகிவிடும் என்பதுடன் இருதரப்பு பலம் தொடர்பான கணிப்புக்களும் உலகின் கவனத்திற்கு சென்றுவிடும்.

கடந்த 10 நாட்களுக்குள் நிகழ்ந்த இரண்டு எதிர்த்தாக்குதல்கள் மூலம் புலிகள் சிங்கள அரசிற்கு புரியும்படி அவர்களின் மொழியில் பல தகவல்களை கொடுத்துள்ளார்கள். அதாவது:

 • கடந்த நான்கரை ஆண்டுகளில் கிழக்கிலோ வடக்கிலே புலிகளின் பலம் சற்றேனும் மாற்றமடையவில்லை.
 • அரசு சமாதானத்தை நோக்கி நகர்ந்தால் புலிகளும் தயார், பேசிக்கொண்டே போர் புரிவோம் என்றால் அதற்கும் புலிகள் தயார்.
 • ஓட்டுக்குழுக்கள் புலிகளின் பலத்தை சிதைக்கவோ அல்லது படையினரின் பலத்தை அதிகரிக்கவே பயன்படப்போவதில்லை.
 • சர்வதேசத்தால் அமைதி வழிக்கு திரும்பவைக்க முடியாத சிங்கள அரசை புலிகளால் திரும்பவைக்க முடியும்.
 • அரசு முழு அளவிலான போரை விரும்பின் புலிகள் அதற்கும் தயார்.

பனிச்சங்கேணி, முகமாலை சமர்களில் ஒரு சில சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்புக்களை கைப்பற்றிவிட்டு அல்லது ஒரு டசின் புலிகளின் இறந்த உடல்களையாவது எடுத்து தென்பகுதி சிங்களவரை மகிழ்சிப்படுத்தி விட்டு பேச்சுக்கு சென்றால். அரசு பலமான நிலையில் பேச்சுக்கு செல்கிறது என்ற மாயையை தெற்கில் ஏற்படுத்தி விடலாம். மேலும் அரசு நிபந்தனையற்ற பேச்சுக்கு செல்கின்றது என்று கூப்பாடு போடும் ஜே.வி.பி, கெல உறுமைய போன்ற கட்சிகளின் வாயையும் அடைத்து விடலாம் என்ற அரசின் கனவில் மண்விழுந்துள்ளது.

எனினும் எதிர்வரும் 28-29 ஆம் திகதிகளில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள பேச்சுக்களுக்கு முன்னர் மீண்டும் சிங்களப்படைகள் தம்மை பலமானவர்கள் என காண்பிக்க மிக இலேசான புலிகளின் இலக்குகளை பெரும்படை கொண்டு கைப்பற்றவோ அல்லது தாக்கவோ முனையலாம். அல்லது தமிழ் மக்களின் மீது கண்மூடித்தனமாக விமானக் குண்டுவீச்சுக்களை நிகழ்த்தி விட்டு அவர்களை புலிகளின் கணக்கில் சேர்க்கலாம். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் அரசு செலுத்தவேண்டிய விலைகள் அதிகமாகவே இருக்கும் என்பது தான் களயதார்த்தம்.

பேச்சையும் போரையும் சமகாலத்தில் நிகழ்த்த அரசால் முடியும் என்றால் புலிகளாலும் அது முடியும் என்பது தான் தற்போது நடைபெறும் நிகழ்வுகளின் சுருக்கம். மேலும் போர்நிறுத்த காலத்தில் ஒருவர் பிரதேசத்தை மறுதரப்பு கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரலாமா என்பது உட்பட பல போர்நிறுத்த அம்சங்கள் ஜெனிவா பேச்சின் ஊடாக உறுதிப்படுத்தப்படும். இதன் மூலம் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளும்; தெளிவாகும்.

ஏனெனில் கடந்த வருடம் நவம்பரில் தேசியத் தலைவரால் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது சமாதான முயற்சிகளுக்குரிய நல்லெண்ண சமிக்கைகளை உருவாக்குவதற்காக மகிந்தவிற்கு ஒரு கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த கால எல்லையும் தனது முடிவை அண்மித்து விட்டதாகவே தோன்றுகிறது. மகிந்த வெளிப்படுத்திய நல்லெண்ணங்களையும் நாமும் அறிவோம் உலகும் அறியும். எனவே விடுதலைப்போர் தனது அடுத்த கட்டத்திற்கு தாமதமின்றி நகரப்போவதை மட்டும் தான் தற்போது நடைபெறும் நிகழ்வுகளின் ஊடாக உறுதிபடக் கூறமுடியும்.

எழுதியவர்: அருஸ் (வேல்ஸ்)

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம் (ஒக்டோபர் 14, 2006)

Saturday, October 14, 2006

மன்மோகன்சிங்கை வளைத்திருக்கும் தமிழர் எதிர்ப்புக்குழு

இலங்கை இனப்பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாமல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கேரளாவைச் சேர்ந்த மலையாளிகள் குழு ஒன்று இறுக்கிப் பிடித்திருப்பதாக பிரபல இந்திய ஆங்கில ஊடகமான தி ஸ்டேட்ஸ்மென் சாடியுள்ளது.

த ஸ்டேட்ஸ்மென் நாளிதழில் பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்:

தெற்காசியாவில் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்ட ஒரு நாடாக உருவாகி உள்ளதாக அண்மையில் பெங்களுரைச் சேர்ந்த உத்திகளுக்கான அமைப்பு ஒன்றின் அறிக்கையில் அண்மை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானைவிட 1,000 பேருக்கு 8 இராணுவத்தினர் என்கிற நிலை சிறிலங்காவில் உள்ளது. தனது பொருளாதாரத்தில் 4.1 விழுக்காட்டை பாதுகாப்புக்கு சிறிலங்கா ஒதுக்குகிறது. இந்தியாவோ 2.5 விழுக்காடு, பாகிஸ்தான் 3.5 விழுக்காடுதான் ஒதுக்குகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் 8 மில்லியன் டொலர் இராணுவ நிதி ஒதுக்கீட்டு எதிராக சிறிலங்கா அரசாங்கமானது ஒரு பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டும்தான் அச்சுறுத்தல் உள்ளது. 8 ஆயிரம் வலிமையான போராளிகளைப் பெற்றுள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிராக 1 இலட்சத்து 50 ஆயிரம் முழு அளவிலான வலுவான இராணுவத்தினரையும் 20 ஆயிரம் கடற்படையினரையும் சிறிலங்கா இராணுவம் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலிய தயாரிப்பான கிபீர் சூப்பெர் சொனிக் விமானங்கள், மிக்-23, எம்.ஐ.-24 மற்றும் உலங்குவானூர்திகளை சிறிலங்கா விமானப் படை பெற்றுள்ளது.

சிங்களப் பேரினவாத கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் கூட்டணியுடன் கடும் போக்கு தேர்தல் அறிக்கையை முன்வைத்து அரச தலைவரானார் மகிந்த ராஜபக்ச.

அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்களின் ஜனநாயகப் பூர்வ உரிமைகளுக்கான விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பலியாக்கப்பட்டு விட்டது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்க், தமிழ் மக்களின் விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாத ஆலோசகர்களின் இறுக்கமான பிடியில் உள்ளார்.

திட்டமிடப்பட்டதோ அல்லது யதேச்சையானதோ பிரதமர் மன்மோகன்சிங்கின் முதன்மைச் செயலாளர், பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை விவகாரங்களைக் கையாளும் வெளிவிவகார இணை அமைச்சர், வெளிவிவகாரச் செயலாளர், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர், றோ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் அனைவருமே மலையாளிகள், இவர்கள் அனைவருமே செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் வாழும் மொழியாக தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான கடும் போக்கு உணர்வு கொண்டவர்கள்.
இந்தியாவின் நிலைப்பாட்டை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சிறிலங்கா பாகிஸ்தானை அங்கு அனுமதித்துள்ளது. பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநரும் ஐ.எஸ்.ஐ.யை இயக்குபவருமான பசீர் வாலி மொகமட், சிறிலங்காவின் முன்னாள் தூதுவராக பணியாற்றினார். அவருக்குப் பின்னால் பாகிஸ்தானின் விமானப் படையின் பிரதி தளபதி ஏர் வைஸ் மார்சல் செக்சத் அஸ்லம் செளத்ரி அண்மையில் நியமிக்கப்பட்டார். பிரிவினைவாதத்துக்கு எதிராக வான் வழித் தாக்குதல்களில் நிபுணத்துவம் பெற்றவர் அவர். மகிந்த ராஜபக்ச அரச தலைவரான பின்னர் சிறிலங்கா மற்றும் பாகிஸ்தானிய இராணுவங்களுக்கிடையேயான இரகசிய கூட்டுறவின் பின்னணியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் முக்கியமான இராணுவ விவகாரங்களை இந்தியாவுக்கு தெரிவிக்கும் வழமையை சிறிலங்கா கொண்டிருந்தது. சிறிலங்காவின் போர் விமானங்கள், பாகிஸ்தானில் மறுசீரமைப்புக்காக அனுப்பிவைக்கபப்ட்டிருந்தன.
இப்போது சிறிலங்காவின் விமானப்படையானது ஆளில்லா வேவு விமானனங்களையும் வான்குண்டுகளையும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து கோருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகலின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எதிரான நடவடிக்கைக்காக இவை கோரப்பட்டுள்ளன. சிறிலங்கா எதிர்கொண்டிருக்கும் இனப்பிரச்சனைக்கு தீர்வானது பிரபாகரனை அழிப்பதில் அல்ல.

சிறிலங்கா இராணுவம் பெருந்தொகை மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ தளபாடக் கொள்வனவில் ஈடுபடுகிறது. பாகிஸ்தானிடமிருந்து ரி-55 பிரதான யுத்த டாங்கிகளையும் சி-130 விமானத்தையும் சிறிலங்கா கோரியுள்ளது. மேலும் 10 பக்டர் சிகான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்டவைகளும் சிறிலங்காவின் கொள்வனவுப் பட்டியலில் உள்ளன.

பலூச் விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது அண்மையில் பாகிஸ்தான் விமானப் படையினர் வெற்றிகரமாக நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிய பயிற்சி உதவியுடன் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர் பகுதிகளில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா விமானப் படை குண்டு வீசி வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக ஒரு கொடும் செயலாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் படையணியையும் உருவாக்க மகிந்த ராஜபக்ச நகர்வுகளை மேற்கொண்டுள்ளார். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை ஒரு வளைகுடாவுக்குள் தள்ளிவிட மகிந்த ராஜபக்ச முயற்சிக்கிறார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் கடந்த செப்ரெம்பர் 18 ஆம் நாளன்று 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினர்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியது. சிங்களவர் பெரும்பான்மையாக வசிக்கும் றாத்தல்குளம் பகுதியில் அணைக்கட்டு ஒன்றை சீரமைக்கச் சென்ற போது இச்சம்பவம் நடந்தது. படுகொலைச் சம்பவம் நடந்த இடமானது சிறப்பு அதிரடிப்படையினர் முகாமுக்கு அருகாமையில் உள்ளது. கொழும்பு ஊடகங்களும் அரசாங்கம் கூறியதைத்தான் ஒப்புக் கொண்டதே தவிர சுயாதீனமாக அச்செய்தியை ஆய்வு செய்யவில்லை.

ஓகஸ்ட் முதல் வாரத்தில் 17 நிவாரணப் பணியாளர்கள் மூதூரில் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டது. 17 பேரும் தமிழர்கள். பிரான்ஸ் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். படுகொலை செய்யப்பட்டோரில் 15 பேர் மண்டியிட வைக்கப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவர் தப்பியோட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 17 பேரும் நிவாரணப் பணியாளர்கள் என்பதைத் தெரிவிக்கும் வகையிலான உடை அணிந்திருந்தனர். இந்தப் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே முழுமையான காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியது.

வன்னியில் முல்லைத்தீவில் ஓகஸ்ட் 16 ஆம் நாளன்று கைவிடப்பட்டோர் இல்லம் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 61 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டனர். சென்னையில் உள்ள சிறிலங்கா பிரதித் தூதுவர் பி.எம்.ஹம்சா உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகள் அனைவருமே விடுதலைப் புலிகளின் சிறார் படையணியினரே கொல்லப்பட்டனர் என்று பொதுமக்களுக்கு தவறான தகவலைத் தெரிவித்தனர். அந்த இல்லத்தை சர்வதேச பார்வையாளர்கள் சென்று பார்வையிட்டு சிறிலங்காவின் கருத்தை நிராகரித்தனர்.

ஹவானாவில் செப்ரெம்பர் 16 ஆம் நாள் நடைபெற்ற மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு கொடுமையான பயங்கரவாத இயக்கமாக வர்ணித்த மகிந்த ராஜபக்ச, கொடூரமான பயங்கரவாதம் தலை தூக்கும்போது பயங்கரவாதத்துக்கு எதிரான போரையும் வலிமையாக புதுப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரம நாயக்க கூறுகிறார்: இந்த நாட்டின் எந்தப் காட்டில் பயங்கரவாதம் இருந்தாலும் அதனை விரட்டியடிக்க சிறிலங்காவுக்கு ஆயுதங்களை தருவதற்கு பல நாடுகள் முன்வந்துள்ளன" என்கிறார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண இராணுவ வழித் தீர்வையே முன்வைக்கிறது என்பதை இது தெளிவாக வெளிப்படுத்துகிறது.

தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கு - கிழக்கு மாகாணங்கள் 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்டன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வடக்கு கிழக்கைப் பிரிக்க ஜே.வி.பி.யின் மூலம் வழக்கு தொடர்ந்திருப்பார் மகிந்த ராஜபக்ச என சந்தேகிக்கத் தோன்றுகிறது.

சிங்கள அரசியல்வாதிகளின் மனநிலையை இந்திரா காந்தி நன்கு அறிந்து வைத்திருந்தார். அதனால் இலங்கை விவகாரங்களுக்காக ஜி.பார்த்தசாரதியை சிறப்பு ஆலோசகராகவும் நியமித்திருந்தார். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். அதனைச் செயற்படுத்தும் முன்னமே அவர் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் இந்தியாவின் வைஸ்ராய் என்று சிங்கள அதிருப்தி அரசியல்வாதிகளால் வருணிக்கப்பட்ட அப்போதைய சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.டிக்சிட்டும் சில திரிபுவேலைகளைச் செய்த போதும் இந்திராவின் கொள்கையை பின்பற்றி அவரது மகன் ராஜீவ் காந்தி வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்தார்.

இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்திக்குப் பின்னர் இந்தியாவின் எந்தப் பிரதமரும் இலங்கை இனப்பிரச்சனையை புரிந்து கொள்ளவோ இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண உதவோ இல்லை.

கிளிப்பிள்ளை சொல்வதைப் போலவே "இலங்கையின் ஐக்கியம் மற்றும் பிரதேச ஒற்றுமை குறித்து" இந்தியா வாசித்துக் கொண்டிருந்தால் அது பிரச்சனைக்குத் தீர்வு ஆகாது. இலங்கையின் இனப்பிரச்சனைக்கு சில நெளிவுகளுடன் கூடிய கூட்டாட்சி முறையிலான தீர்வு காண மகிந்த ராஜபக்ச முன்வர வேண்டும் என்று சாம் ராஜப்பா அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார்.

நன்றி: புதினம்

மேலும் இராணுவ உடல்கள் கண்டுபிடிப்பு

யாழ். முகமாலை முன்னரங்க நிலைகளில் உருக்குலைந்த நிலையில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் 43 உடல்கள் முழு இராணுவ மரியாதையுடன் எரிக்கும்படி கூறியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ. இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பி.பி.சி. தமிழோசைக்கு இன்று வெள்ளிக்கிழமை இளந்திரையன் அளித்த நேர்காணலில் கூறியதாவது:

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா இராணுவத்தினரின் 74 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முன்னரங்க நிலையில் சற்று நல்ல நிலையில் இருந்த மேலும் 4 உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவையும் ஒப்படைக்கப்பட உள்ளன. இன்று வெள்ளிக்கிழமை மற்றொரு இராணுவத்தினரின் உடலை ஒப்படைத்துள்ளோம்.

முன்னரங்க நிலைகளில் உருக்குலைந்த நிலைகளில் உள்ள இராணுவத்தினரின் உடலங்களிலிருந்து சொந்த விவரங்கள் மற்றும் அடையாளங்களை எடுக்க முடியுமாயின் அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக எடுத்து வைத்து விட்டு மற்றவற்றை முழு இராணுவ மரியாதையுடன் எரிக்கும்படி கூறியிருக்கிறோம் என்றார் இளந்திரையன்.

முன்னைய செய்தி: இராணுவத்தினரிடம் 74 சடலங்கள் ஒப்படைப்பு (படங்களுடன்)

நன்றி: புதினம்

Friday, October 13, 2006

இராணுவத்தினரிடம் 74 சடலங்கள் ஒப்படைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 74 சடலங்களை சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

யாழ். குடாநாட்டு முன்னரங்க நிலைகளில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதலைத் தொடர்ந்து 74 இராணுவத்தினர் சடலங்களை ஒப்படைப்பதற்காக கிளிநொச்சியின் பிரதிக்குழுவினரை விடுதலைப் புலிகள் அழைத்திருந்தனர்.

உடனடியாக இது தொடர்பில் வவுனியாவில் உள்ள பிரதிக்குழுவினர் சிறிலங்கா இராணுவத்தினரை தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகள் வேண்டுகோளைத் தெரிவித்தனர். மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் உடல்களை ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 4 ட்றக்குகளில் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு ஏ-9 பாதையில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் உள்ளுர் நேரப்படி இரவு 8 மணிக்கு இராணுவத்தினரிடம் உடல்களை ஒப்படைத்தோம்.

முன்னதாக விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சென்று பார்வையிட்டனர் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 74 உடல்களை பெற்றுக் கொண்டதாகவும் மேலும் 4 பேர் காணவில்லை என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

படங்கள் கோரமானவை எச்சரிக்கை!!

நன்றி: புதினம்

Thursday, October 12, 2006

43பேர் பலி, 30பேரைக் காணவில்லை-ராணுவம் கூறுகிறது

யாழ். முகமாலை சமரில் 43 சிறிலங்கா இராணுவத்தினர் பலியாகி உள்ளனர்- 25 முதல் 30 வரையிலான இராணுவத்தினரைக் காணவில்லை- 224 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் நிறுவனம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

வடபகுதியில் நேற்று நடந்த மோதலில் 43 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 25 முதல் 30 வரையிலானோர் காணவில்லை என்றும் 224 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

"எங்களது முன்னரங்க நிலை மற்றும் புலிகளின் முன்னரங்க நிலைகளுக்கு இடையே சூனியப் பிரதேசத்தில் மோதல் நடந்தது" என்றார் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க. "எங்கள் தரப்பில் சிலர்- 25 முதல் 30 வரையிலான இராணுவத்தினர் காணவில்லை. அவர்களின் உடல்களை புலிகள் வைத்திருக்க வேண்டும். இன்று வியாழக்கிழமை மாலையில் இருதரப்பு எறிகணைத் தாக்குதல் நடைபெற்றது" என்றார் அவர் என ரொய்ட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் 200 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் 75 பேரின் உடல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சிறிலங்கா இராணுவம் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் 113 பேர் காயமடைந்ததாகவும் நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்த நிலையில் இன்று இத்தகைய இழப்பை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News: இராணுவத்தினரிடம் 74 சடலங்கள் ஒப்படைப்பு (படங்களுடன்)

நன்றி: புதினம்

200 இராணுவத்தினர் பலி, 75 சடலங்கள் மீட்பு

இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிப்பு: 200 இராணுவத்தினர் பலி- 75 சடலங்கள் மீட்பு

[புதன்கிழமை, 11 ஒக்ரொபர் 2006, 19:55 ஈழம்]

வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய அளவிலான வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட 75-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பறப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் 4 டாங்கிகள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன.பல நூற்றுக்கணக்கான போராயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடபோர்முனையில் முகமாலை முதல் கிளாலி வரையான முன்னரங்கப் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கி பாரிய அளவில் முன்னகர்ந்தனர்.

முன்னகர்ந்த படையினர் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளுக்குள் ஊடுருவிய நிலையில் விடுதலைப் புலிகள் தீவிர பதில் தாக்குதலை தொடுத்தனர்.
இன்று மாலை 6.30 மணிவரை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தீவிர முறியடிப்புத் தாக்குதலால் இராணுவத்தினர் பாரிய இழப்புக்கள் அழிவுகளுடன் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்த முறியடிப்புத் தாக்குதலின் போது இராணுவத்தினரின் டாங்கிகள் 4 விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதல்களில் தமது டாங்கிகளில் சிக்கியும் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

டாங்கிகளில் சிக்கி கொல்லப்பட்ட இராணுவச் சடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட இராணுவச் சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கிளிநொச்சிக்கு கொண்டு வரப்படுகின்றன.
இராணுவத்தினரின் சடலங்களை பொதி செய்தற்கான பைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியுள்ளது.

இன்றைய தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவத்தினரை இராணுவத்தரப்பு வரணிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று அங்கிருந்து 3 உலங்குவானூர்திகள் மூலம் பலாலிக்கும் அங்கிருந்து கொழும்புக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வரணிக்கும் பலாலிக்கும் இடையில் இன்று பகல் முழுமையும் 3 உலங்குவானூர்திகள் காயமடைந்த இராணுவத்தினரை ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டன.

இன்றைய முறியடிப்புத் தாக்குதலில் துணைப்படை வீரர்கள் நால்வரும் போராளிகள் 6 பேரும் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.

நன்றி: புதினம்

Wednesday, October 11, 2006

வடக்கில் போரைத் தொடக்கியது ஸ்ரீலங்கா

வடபோர்முனையில் போரைத் தொடங்கியது சிறிலங்கா
[புதன்கிழமை, 11 ஒக்ரொபர் 2006, 09:38]

வடபோர் அரங்கில் மும்முனைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல் ஒன்றை இன்று தொடங்கியுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை 6 மணி முதல் செறிவான ஆட்டிலெறி, பல்குழல் ரொக்கட் மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு கிளாலி, நாகர்கோவில், முகமாலைப் பகுதிகளில் இராணுவத்தினர் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கையை தொடங்கினர்.

இராணுவத்தினரின் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

நன்றி: புதினம் (11 ஓக்டோபர் 2006)
__________________________________
Sri Lanka launches offensive in Jaffna, curfew imposed in Thenmaradchi
[TamilNet, Wednesday, 11 October 2006, 04:16 GMT]

Sri Lanka Army has launched ground troop-movement into Liberation Tigers of Tamil Eelam controlled territory with heavy artillery and MBRL rocket fire since 6:30 a.m. Wednesday, LTTE Military Spokesman Irasiah Ilanthirayan told media. Sri Lanka Monitoring Mission (SLMM) was notified by the LTTE on the Sri Lankan offensive, LTTE officials at the Peace Secretariat in Kilinochchi said. The offensive, shattering peace hopes, comes few hours after an official announcement by Norway that parties had agreed to meet in Switzerland from 28 to 29 October.

"Sri Lanka Army has been moving ground troops across the Northern Front on two different localities, Muhamalai and Kilali at 6:30 a.m. today. Heavy fighting is going on inside the LTTE territory," Mr. Ilianthiryan said.

Meanwhile, Sri Lanka Army from Jaffna SLA Headquaters announced that curfew had been imposed in Allarai, Kachchai, Velakkerni, Thanankilappu and Kovilakandy coastal villages from 8:15 a.m. tlll Thursday 5:00 a.m.

The fishermen in Gurunagar area alleged Tuesday more than 200 boats, confiscated by the Sri Lanka Army, were likely to be used in an offensive towards the Liberation Tigers controlled Pooneryn across the shallow waters of Jaffna lagoon. The heavy SLN boats are not effective on the Gurunagar shallow sea, according to the fishermen.

Tuesday night, announcing the agreement for talks, Norwegian Foreign Ministry said the parties to the conflict were taking a small but important step towards continuing the peace process although the situation on the ground remained difficult.

"It is crucial that the Government [of Sri Lanka] and the LTTE now use this opportunity to cease hostilities as called for by the Tokyo Co-Chairs," Norwegian International Development Minister Erik Solheim was quoted as saying in the Press Release issued by the Norwegian Ministry of Foreign Affairs.

நன்றி: Tamilnet

Monday, October 09, 2006

கொழும்பில் துணை ராணுவக்குழுவின் சித்திரவதை முகாம்

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் தலங்கமவில் நடத்தப்பட்டு வரும் சித்திரவதை முகாம் குறித்து கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

மட்டக்களப்பைச் சேர்ந்த பூபாலபிள்ளை கந்தராஜா (வயது 26) என்பவர் கடத்தல் மற்றும் பணம் பறிப்பு வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தல் தொடர்பாகவும் தலங்கமவில் கந்தராஜாவும் அவரது குழுவினரும் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியது தொடர்பாகவும் பலமுறை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதே கந்தராஜா முன்னர் ஒருமுறை அத்துகிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோவினால் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு வர்த்தகரான சதாசிவம் குமாரசாமியை கடத்தி பணம் பறித்த போது குமாரசாமியின் மகன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கந்தராஜா கைது செய்யப்பட்டார். கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கந்தராஜாவிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு பட்டினப்பாக்கம் காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

இந்த விசாரணையின் போது தான் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்தவர் என்றும் அக்குழுவினருடன் மேலும் இரு குழுக்கள் இணைந்து செயற்படுவதாகவும் இக்குழுவினரே கொழும்பு தமிழ் வர்த்தகர்களின் கடத்தல்களை மேற்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

கந்தராஜாவிடமிருந்து கடத்தப்பட்ட வர்த்தகர்கள் தொடர்பான விவரங்களை கொழும்பு குற்றப் பிரிவினர் பதிவு செய்து வருகின்றனர்.

மலபேயைச் சேர்ந்த ரி.நகுலேந்திரன் என்பவர் தலைமையிலான குழு ஒன்றும் கடத்தலில் ஈடுபடுவதாக கந்தராஜா கூறியுள்ளார்.

தலங்கமவில் உள்ள மற்றொரு வீட்டிலிருந்தும் மலபே வீட்டிலிருந்துதான் கடத்தப்பட்டோரை சித்திரவதை செய்துள்ளனர். இந்த இரு வீடுகளும் சிங்களவர்களிடமிருந்து வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் சிங்களவருக்குச் சொந்தமானது. தலங்கம வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.

இந்த வீட்டில் தங்கியிருந்தவர்கள் தமிழர்கள் என்றும் அவர்கள் சந்தேக நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள் என்றும் தெரிந்து காவல்துறையினரிடம் நாங்கள் தெரிவித்தோம் என்று அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

துணை இராணுவக் குழுவினரால் தான் கடத்தப்பட்டது குறித்து கொழும்பு வர்த்தகரான சதாசிவம் குமாரசாமி (வயது 51) கூறியதாவது:

கடந்த செப்ரெம்பர் 28 ஆம் நாளன்று பணியிடத்திலிருந்து வீட்டுக்கு காலை 10.15 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். புறக்கோட்டை சந்தைப்பகுதியில் சிறு அளவிலான மீன் வர்த்தகமும் காசோலை மாற்றும் பணியையும் செய்து வந்தேன்.

உந்துருளியில் ஹின்னி அப்புகாமி வீதியில் வந்து கொண்டிருந்தேன். அப்போது மற்றொரு உந்துருளியில் வந்த நபர்கள் என் வாகனத்தை நிறுத்துமாறு கூறினர்.

"குமார் அய்யா நில்லுங்கள்" என்றனர். ஆனால் நான் நிற்கவில்லை.

அப்போது வெள்ளை வான் ஒன்று என்னை கடந்தது. உந்துருளியிலிருந்து கீழே விழுந்த நான் தப்பி ஓட முயற்சித்தேன். அந்தக் குழுவைச் சேர்ந்த ஒரு இளைஞர் துப்பாக்கியால்
என் தலையில் தாக்கினார். நான் வலியால் துடித்தேன்.

அதன் பின்னர் என் வாய் கட்டப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கைக்கு கீழே வாகனத்துக்குள் இருந்தேன். என்னுடைய நகைகள் மற்றும் உடைமைகளை அவர்கள் பறித்துக் கொண்டனர்.

20 நிமிட பயண நேரத்துக்குப் பின்னர் ஒரு இராணுவ முகாம் போன்ற தோற்றமுள்ள ஒரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன். ஆனால் அது இராணுவ முகாம்தானா என்று தெரியவில்லை. 46-க்கு 25 அடி என்கிற அளவிலான ஒரு அறையில் நான் அடைத்து வைக்கப்பட்டேன். என்னை அழைத்துக் கொண்டு வரும் வழியில் வெள்ளை வான் ஒரு இடத்தில் நின்றது. ஆனால் அது எந்த இடம் எனத் தெரியவில்லை.

அறையினுள் இருந்த என்னை விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுப்பவராக இருந்தால் யார் பணத்தைப் பெறுவது? அது எப்படி வடக்குப் பகுதிக்குச் செல்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

என்னைத் தாக்கினர். நான் பதில் சொல்லாது போனால் கொன்றுவிடப்போவதாகவும் எச்சரித்தனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. நான் கொழும்பில் பிறந்தவன். எப்போதுமே யாழ்ப்பாணத்துக்கு சென்றது இல்லை. விடுதலைப் புலிகளையும் எனக்குத் தெரியாது.

அதன் பின்னர் இரவு 8.30 மணியளவில் முன்னரைப் போலவே என்னைக் கட்டி வெள்ளை வானில் இருக்கையின் கீழே அடைத்தனர். வானில் 10 பேர் கொண்ட குழுவினர் இருந்தனர்.

15 நிமிட நேர பயணத்துக்குப் பின்னர் வாகனம் நின்றது. 8 பேர் அதிலிருந்து இறங்கினர். அதன் பின்னர் இருவருடன் வாகனம் சென்றது. எனக்குப் பின்னால் ஒருவரும் முன்னால் ஒருவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் என்னைத் தாக்கினர். அவர்களின் தாக்குதல்களால் கதறியழுது கொண்டிருந்தேன்.

என் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை சிரமப்பட்டு சற்று விலக்கிவிட்டேன். அந்த வாகனம் நாவல கொசவத்தையில் நின்றது. அந்த இரு நபர்களும் வாகனத்திலிருந்து இறங்கினர். அங்கிருந்த பல்பொருள் அங்காடிக்கு வெளியே உந்துருளியில் ஒருவர் நின்றிருந்தார். இறங்கிச் சென்ற இருவரும் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தனர்.
வலதுபுறமாக வெள்ளை வான் திரும்பி குடியிருப்புப் பகுதியை நோக்கிச் சென்றது. இரண்டு மாடி கட்டட வீடு ஒன்றில் இருட்டான பகுதிக்கு அழைத்துச் செல்லப்ப்ட்டேன்.

எனது உடைகளை கழற்றுமாறு கூறினர். பிராண வாயு கலன் ஒன்றுடன் என்னை கட்டினர். நான் விடுவிக்கப்பட வேண்டுமானால் ரூ. 10 மில்லியன் தொகை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டனர். என்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்றனர். அதன் பின்னர் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டனர். நவராத்திரிக்காக உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறினேன். சாப்பாடும் குழம்பும் கொடுத்தனர்.

கடத்திய நபர்கள் அனைவரும் தமிழர்கள். சிங்களமும் நன்றாக பேசினர். கடத்தியவர்கள் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களாக தோன்றினாலும் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த நபர்களும் அக்குழுவில் இருந்தனர்.

என்னைக் கடத்தியோரில் சிலர் அதிகாலை 2.30 மணிக்கு அங்கு மீண்டும் வந்து என்னைத் தாக்கி தொகை கேட்டனர். நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டாவது மாடியானது சிறப்பு சித்திரவதை முகாம் போல அமைக்கப்பட்டிருந்தது. எந்த ஒரு நபரும் உள்ளே நுழைந்தாலும் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருப்போர் தெரியாத வகையில் அந்த அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. நான் அங்கு அடைக்கப்பட்டிருந்தபோது 4 பேர் ஏற்கெனவே அங்கிருந்தனர்.

அதன் பின்னர் 29 ஆம் நாள் காலை 10 மணிக்கு கடத்தல்காரர்கள் என்னிடம் வந்து பணத்தை தாங்கள் பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

என்னுடைய செல்லிடப்பேசியை பயன்படுத்தி 28 ஆம் நாள் மாலை என் மகனிடம் பேசியுள்ளனர். பணத்தைக் கொடுத்தால்தான் என்னை விடுவிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடத்தல் குழுவைச் சேர்ந்த ஒருவர் பணத்தை பெறுவதற்காக சென்றார். அப்போது கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்னிடம் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டனர். தங்களது குழுவைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்றும் என்னை விடுவிக்க உள்ளதாகவும் கூறிய அவர்கள், கைது செய்யப்பட்ட நபர் இருநாட்களில் வந்துவிடுவார் என்றும் தெரிவித்தனர்.

அதன் பின்னர் கரும்பச்சை நிற வாகனத்தில் மீண்டும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்துச் சென்றனர். தங்களது இயக்க வளர்ச்சிக்கான நிதிக்காகவே கடத்திச் சென்றதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

அப்போது அக்குழுவைச் சேர்ந்த தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி வந்தது. என்னிடம் பேசக் கொடுத்தனர். "நாம் தமிழர்கள். எங்களது சகாவை காவல்துறையிடமிருந்து விடுவிக்க நான் உதவுகிறேன்" என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார்.

பொரள்ளைச் சந்தியில் என் கண்களைக் கழற்றிவிட்டு விட்டுவிட்டனர். திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும் என்றும் இல்லையெனில் சுட்டுவிடுவதாகவும் அவர்கள் கூறினர். நானும் திரும்பிப் பார்க்கவில்லை. அந்த வாகனம் அங்கிருந்து நகர்ந்துவிட்டது என உறுதி செய்த பின்னர் அப்பகுதியில் இருந்த தொலைத் தொடர்பகம் ஒன்றிலிருந்து எனது வீட்டுக்குத் தொலைபேசியில் பேசினேன். முச்சக்கர வாகனத்தில் வீடு போய் சேர்ந்தேன் என்றார் குமாரசாமி.

மொத்தம் ரூ. 10 மில்லியன் தொகை கேட்ட அந்நபர்கள் ரூ. 6 மில்லியன் கேட்டுள்ளனர். ஆனால் இந்தத் தொகை கூடுதலானது என்று குமாரசாமியின் மகன் மறுத்ததுடன் கொட்டாஞ்சேனை காவல்துறையினரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

கொட்டாஞ்சேனையில் உள்ள நவீன் செராமிக்சுக்கு எதிர்ப்புறம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே பணத்தைக் கொண்டு வருமாறு கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர். கடத்தல் குழுவைச் சேர்ந்த ஒரு நபர் குமாரசாமியின் மகனிடம் நெருங்கி வந்து பணத்தைக் கேட்டுள்ளார். தந்தையை விடுவித்தால்தான் பணம் தரமுடியும் என்று கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பூபாலபிள்ளை கந்தராஜா என்ற அந்நபர் கைது செய்யப்பட்ட போது தான் கருணா குழுவைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். ஆனால் விடுதலைப் புலிகளுக்காக அவர் பணம் பறித்ததாக அரசாங்கம் முதலில் தெரிவித்தது.

கருணா குழுவினரது கொழும்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பூபாலபிள்ளை கந்தராஜா, சிறிலங்கா காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அக்குழுவைச் சேர்ந்தவர்களும் தமது குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யபப்ட்டதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: eelampage.com

Sunday, October 08, 2006

பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு புலிகளைச் சீண்டும் அரசு

பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு புலிகளைச் சீண்டும் அரசு

-விதுரன்-

இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் சாத்தியமாகுமா? படை வலுச் சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அரசு, புலிகளை மேலும் பலவீனப்படுத்துவதன் மூலம் பேச்சுகளை இல்லாது செய்துவிடலாம் அல்லது பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை வெகுவாகக் குறைத்து விடலாமெனக் கருதுகிறது.

அடுத்த சுற்றுப் பேச்சுக்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து, பேச்சுகள் நடைபெறும் இடத்தைத் தெரிவு செய்யும் முயற்சியில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கையிலேயே மீண்டும் கடுஞ் சமர் வெடித்துள்ளது.

வடக்கு - கிழக்கில் போர்முனைக்குச் செல்லப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போதை சமர்கள் குறித்து உடனடியாகத் தங்களால் எதுவித முடிவையும் தெரிவிக்க முடியாதிருப்பதாக கண்காணிப்புக் குழு கூறிவருகிறது. ஆனாலும், இதற்கு முன்னர் வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற ஆக்கிரமிப்பு சமர்கள் குறித்து கண்காணிப்புக் குழு கடுமையான நிலைப்பாடெதனையும் எடுக்காதது, தற்போது மேலும் பல சமர்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் இங்கு கண்காணிப்புக் குழு என்ன செய்கிறதென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புலிகள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாக அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன. மற்றொரு பேச்சுவார்த்தையானது, அவர்கள் தங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வழங்கப்படும் கால அவகாசமென்றே அரசு கருதுகிறது. இதனால், புலிகளுடன் பேச்சுக்குச் செல்வதை விட போருக்குச் செல்வதிலேயே அரசு தீவிர ஆர்வம் காட்டுகிறது.

இதற்கு வசதியாக அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினத்தை இரண்டு மடங்காக்கியுள்ளது.

சமாதானப் பேச்சுகளை குழப்புவதிலும் புலிகளை தொடர்ந்தும் சீண்டுவதிலும் நோர்வே அனுசரணையாளர்களை விரட்டுவதிலுமே தென்பகுதி தீவிர ஆர்வம் காட்டுகிறது. இதன்மூலம் பேச்சுக்கான வாய்ப்பை இல்லாது செய்து முழு அளவில் மீண்டும் யுத்தத்தைத் தொடக்கி புலிகளைத் தோற்கடித்து விடலாமென அவர்கள் கருதுகின்றனர்.

போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட நாள் முதல் புலிகளுக்கெதிராக தீவிர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உடன்பாட்டைப் பயன்படுத்தி, புலிகள் ஆயுதங்களைக் கடத்தி வந்து குவிப்பதாகவும் படையணிகளுக்கு ஆட்களைப் பெருமளவில் சேர்த்து வருவதாகவும் கடந்த நான்கு வருடங்களாக இந்தக் குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டு வந்தது.

ஆனால், இன்னமும் போர் நிறுத்த உடன்பாடு முறிவடையாத நிலையிலும், முழு அளவில் போர் தொடங்காத நிலையிலும் புலிகள் பற்றி அரசும் படைத்தரப்பும் இனவாதிகளும் கூறிவருபவை பெரும் ஆச்சரியமாகவேயுள்ளது. புலிகள் மிகவும் பலவீனமடைந்துவிட்டார்கள், அவர்களிடம் ஆயுதபலமில்லை, ஆட்பலமும் வெகுவாகக் குறைந்துவிட்டது, போரிடும் ஆற்றலுமில்லை, புலிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர்களென கடந்த 20 வருடங்களாக தவறான எண்ணத்தில் இருந்துவிட்டோம், அவர்கள் மிக விரைவில் தோற்கடிக்கப்படக் கூடியவர்களென்றெல்லாம் பெரும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

அப்படியாயின், இந்தப் போர் நிறுத்த காலத்தில் புலிகள் ஆயுதங்களைக் கடத்தி வந்து குவித்ததாகவும், படையணிகளுக்கு அவர்கள் ஆயிரக் கணக்கில் ஆட்களைச் சேர்த்துள்ளதாகவும் போர் நிறுத்த உடன்பாட்டைப் பயன்படுத்தி அவர்கள் தங்களைப் பெருமளவில் கட்டியெழுப்பியுள்ளதாகவும் தென்பகுதியிலும் சர்வதேச ரீதியிலும் ஏன் பெரும் பிரசாரங்கள் செய்யப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் அங்கீகரிக்கப்படாத போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்த உடன்பாட்டின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுவிட்டன. ஆனாலும், போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருப்பதாகக் கூறப்படுகிறது. புலிகளுக்கிடையே ஏற்பட்ட சிறுபிளவைப் பயன்படுத்தி கருணா குழுவை உருவாக்கி அரசு நிழல் யுத்தத்தை ஆரம்பித்த போதே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமென எச்சரிக்கப்பட்டது. ஆனால், எவருமே அதனைப் பொருட்படுத்தவில்லை. நிழல் யுத்தம் ஆரம்பமான நாள் முதல் இன்று வரையிலான காலத்தை நன்கு அவதானித்தால் இது நன்று புரியும்.

போர் நிறுத்தகாலத்தில், சமாதான முயற்சிகளுக்கும் பேச்சுகளை நடத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைவிட மீண்டுமொரு போரைத் தொடங்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளே மிக அதிகம். அதுவே இன்று பெரும் போரைத் தோற்றுவிக்கப்போகிறது. வடக்கு - கிழக்கு என சகல பகுதிகளிலும் இன்று பாரிய படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படுகின்றனர். பல்லாயிரக் கணக்கானோர் வீடு வாசல்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எனினும், போர் நிறுத்த உடன்பாட்டின் பேரில் பொதுமக்களுக்கு எதிராக நடைபெறும் இந்த அட்டூழியங்களைத் தடுக்க எவருமே முன்வரவில்லை.

தற்பாதுகாப்புக்கான நடவடிக்கையெனக் கூறி அரச படைகள் தினமும் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்கின்றன. புலிகளின் ஆட்லறி நிலைகளையும் மோட்டார் நிலைகளையும் அழிக்க வேண்டியிருப்பதால் அப்பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறியும் படை நடவடிக்கை இடம்பெறுகிறது.

தங்கள் மீது புலிகளே தாக்குதலை நடத்தியதாகவும் தற்பாதுகாப்புக்கான நடவடிக்கையிலேயே தாங்கள் இறங்கியதாகவும் கூறி பாரிய படை நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் புலிகளை முழு அளவில் போருக்கிழுப்பதும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை இல்லாது செய்வதுமே அரசின் நோக்கமாகும்.

இணைத் தலைமை நாடுகளின் கடும் அழுத்தத்தாலேயே தற்போது அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டது. ஆனாலும், பேச்சுவார்த்தையை இப்போது நடத்த அரசு விரும்பவில்லை. அதனைக் குழப்புவதற்கான முயற்சிகள் தற்போது முழு அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்தும் புலிகளின் பகுதிக்குள் பெரும் படையெடுப்பு நடத்தப்படுகிறது. புலிகளும் சில தந்திரோபாயங்களுக்காக பின் நகரும்போறது, அது படையினரின் கடும் நடவடிக்கையால் கிடைத்த வெற்றியெனவும் புலிகளால் படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியவில்லையெனவும் தென்பகுதி கருதுகிறது.

வடக்கில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தியவாறு கிழக்கில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு அங்கிருந்து புலிகளை விரட்டி விடலாமென அரசு கருதுகிறது. சம்பூர் உட்பட மூதூர் கிழக்கில் பல பகுதிகளிலுமிருந்து புலிகள் வெளியேறியதன் மூலம் திருகோணமலையில் புலிகளின் ஆதிக்கத்தையே இல்லாது செய்துவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.

மூதூர் கிழக்கிலிருந்து வெளியேறிய புலிகளின் படையணிகள் வாகரைப் பகுதியை மையமாக வைத்தே தற்போது செயற்படுவதாகக் கருதும் படையினர், தொடர்ந்தும் அப்பகுதிகளில் படை நடவடிக்கைகளை மேற்கொணடு புலிகளின் ஆட்பலத்தையும் ஆயுத பலத்தையும் குறைத்து கிழக்கில் அவர்களின் செயற்பாடுகளுக்கு முடிவு கட்டிவிடலாமெனக் கருதுகிறது.

துணைப்படைகளுக்கு பலாத்காரமாக ஆட்களைச் சேர்த்து அவர்களைப் பயன்படுத்தி அங்கு தொடர்ச்சியாக படுகொலைகளை மேற்கொள்வதும் மக்களை மிரட்டித் தொடர்ந்தும் அச்சத்தின் பிடியில் வைத்திருந்து அங்கு நடைபெறும் தாக்குதல்களையெல்லாம் துணைப்படைகளே மேற்கொள்வது போன்றதொரு தோற்றப்பாட்டை வெளியுலகில் ஏற்படுத்தி கிழக்கில் துணைப் படைகள் விரைவில் புலிகளைத் தோற்கடித்து விடுவார்களென்றதொரு மாயையை ஏற்படுத்தவும் அரசு முயல்கிறது.

இதனொரு கட்டமாகவே வெள்ளிக்கிழமை அதிகாலை திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் மட்டக்களப்பின் மாங்கேணி மற்றும் கஜுவத்தை படைமுகாம்களிலிருந்து புலிகளின் பகுதியிலுள்ள பனிச்சங்கேணிக்குள் பாரிய படைநகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது. வாகரையை இலக்கு வைத்தே இந்தப் பாரிய படைநகர்வு மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவசவாகனங்கள் சகிதம் பல நூற்றுக்கணக்கான படையினர் இந்தப் பாரிய நகர்வில் ஈடுபட்டிருந்தனர்.

விமானப் படை விமானங்களும் கடற்படைப் பீரங்கிப் படகுகளும் இந்தச் சமரில் கடும் தாக்குதல்களைத் தொடுத்தன. ஆரம்பத்தில் ,முன்னேறிய படையினர் மீது புலிகள் கடும் தாக்குதலைத் தொடுக்காததால் புலிகளின் பலம் குறித்துப் படையினர் தவறாகக் கணித்து மேலும் முன்னேறவே, புலிகள் உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர். தங்களுக்கு வாய்ப்பான பகுதியில் வைத்தே அவர்கள் இந்த உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர்.

இதனைச் சற்றும் எதிர்பாராத படையினரும் பின்னர் கடும் தாக்குதலைத் தொடுத்த போதும் புலிகளின் எதிர்த்தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. பல மணிநேரம் நடைபெற்ற சமரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். துணைப் படையினரும் பெருமளவில் கொல்லப்பட்டனர். 15 படையினரின் சடலங்களும் 10 துணைப் படையினரின் சடலங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டதுடன் சிப்பாயொருவர் புலிகளிடம் பிடிபட்டுமுள்ளார்.

இதேநேரம் கடல் வழியாகத் தரையிறங்க முற்பட்ட போது கடற்படையினருக்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளது, டோரா பீரங்கிப் படகொன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் பலத்த இழப்புகளின் பின் படையணிகள் மீண்டும் பழைய இடங்களுக்குத் திரும்பி விட்டன. ஆரம்பத்தில் இந்தத் தாக்குதலை கருணா குழுவே நடத்துவதாக படைத்தரப்பு கூறியது. பின்னர், மாங்கேணி முகாம் மீது புலிகள் தாக்கியதாகவும் படையினர் அந்தத் தாக்குதலை முறியடித்ததாகவும் கூறப்பட்டது.

அதன்பின்னர், புலிகளின் ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைகளை அழிப்பதற்காக படையினர் புலிகளின் பகுதிகளுக்குள் சென்றதாகக் கூறப்பட்டது. இறுதியில் படையினர் மேற்கொண்ட ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதலாலும் விமானப் படையினரும் கடற்படையினரும் மேற்கொண்ட கடும் தாக்குதலாலும் புலிகள் பனிச்சங்கேணி பகுதியிலிருந்து பின்வாங்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.

இந்தச் சமரில் படையினர் கடுமையான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கிழக்கில் புலிகளின் பலம்குறித்து அவர்கள் போட்ட கணக்கு தப்புக் கணக்காகிவிட்டது. இந்தச் சமரில் புலிகளின் 22 உடல்களைக் கைப்பற்றியதாக முதலில் படைத்தரப்பு பிரசாரம் செய்தபோதும் பின்னர் அவ்வாறு எதனையும் கைப்பற்றவில்லையென ஒத்துக்கொண்டது.

பேச்சுக்கு செல்வதை விட போருக்குச் செல்ல முயலும் அரசுக்கு இந்தச் சமர் கடும் அடியாகவுள்ளது. எனினும், புலிகள் பெரிதும் பலவீனமடைந்திருப்பதாலும் அவர்களுக்கு சமாதானப் பேச்சுகள் தற்போது மிகவும் அவசியமாயிருப்பதாலும், பாரிய படை நடவடிக்கைகள் எது நடைபெற்றாலும் அவர்கள் நிச்சயம் பேச்சுக்கு வருவார்களென அரசு கருதுகிறது.

இதனால் பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை எந்தளவுக்குக் குறைக்க முடியுமோ அந்தளவுக்குக் குறைத்து பேச்சுவார்த்தை மேசையிலும் அவர்களைத் தோற்கடிக்க வேண்டுமென அரசு கருதுகிறது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இயலாத நிலைமை தற்போது அரசுக்கு வாய்ப்பாகியுள்ளது. அரசினது இந்த நடவடிக்கை குறித்து இணைத் தலைமை நாடுகளும் மௌனம் சாதிப்பது அரசுக்கு வாய்ப்பாகிவிட்டது. இதனால், தற்போதைய நிலைமையை வாய்ப்பாகப் பயன்படுத்தி மேலும் மேலும் படை நடவடிக்கைகளை மேற்கொண்டு புலிகளை மேலும் மேலும் பலவீனமாக்குவதுடன் அவர்கள் வசமுள்ள பிரதேசங்களையும் கைப்பற்றியவாறு அவர்களைப் பேச்சுவார்த்தை மேசையில் பலமிழக்கச் செய்துவிடலாமென அரசு கருதுகிறது.

ஆனாலும், புலிகள் மௌனம் சாதிப்பதை எந்தத் தரப்பும் உணர்ந்து கொள்ளவில்லை. புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளதாலேயே தோல்விகளைச் சந்தித்து வருவதாகக் கருதும் அரசும் இனவாதிகளும் விரைவில் பேரதிர்ச்சிகளைச் சந்திக்கப் போகிறார்கள். இலங்கை அரசு எதற்கும் இணங்கக் கூடியதல்ல. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனான அனுசரணையை மிக மோசமாக உதாசீனம் செய்வதை இணைத் தலைமை நாடுகள் தற்போது நன்குணர்ந்துள்ளன. இதனால் புலிகள் இனிமேல் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே இவர்களை வழிக்குக் கொண்டு வரலாமென உணரத் தொடங்கியுள்ளன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திற்கு புலிகளும் காத்திருக்கின்றனர். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இலங்கை அரசுக்கு பெரும் படிப்பினையாக இருக்கும். இதனால், தற்போதும் புலிகள் பொறுமை காக்கின்றனர்.

நன்றி: தினக்குரல்