Sunday, October 08, 2006

வாகரை ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு

400 இராணுவத்தினர்- 80 துணை இராணுவக் குழுவினருடன் மேற்கொள்ளப்பட்ட வாகரை ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு- 11 போராளிகள் வீரச்சாவு

சனிக்கிழமை, 7 ஒக்டோபர் 2006

தமிழீழ நிர்வாகப் பகுதியான வாகரை பனிச்சங்கேணிப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க 400 சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த 80 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் இந்த ஆக்கிரமிப்பு முறியடிக்கப்பட்ட சமரில் 11 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்றும் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சி.எழிலன் கூறியுள்ளதாவது:

வாகரை வலிந்த தாக்குதலில் 400 சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் 80 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த முறியடிப்புச் சமர் சிறப்புத் தளபதி கேணல் சொர்ணம் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.

எம்மால் கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கெமுனு வோட்ச் 6 ஆம் படையணியின் கே.எம்.எஸ். ரட்ணநாயக்க (வயது 31) (S400714), நுவரெலியா ரிக்கிலகம பகுதி பனங்கமுவவைச் சேர்ந்தவராவார். அவரது வயிறு, முழங்கால் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சமரில் 50-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட இராணுவத்தினரின் 9 பேரின் உடல்களைப் பெற்றுக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவிட்டது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் இராணுவத்தினரது உடல்களை ஒப்படைப்பதாக நாம் தெரிவித்தோம். ஆனால் உடல்களை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.

முறியடிப்புச் சமரில் வீரச்சாவடைந்த ஒரு போராளியின் உடலை ஒப்படைக்க உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் மொத்தம் 11 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரால் 12 போராளிகளினது வித்துடல்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல.

பனிச்சங்கேணி மற்றும் வாகரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவ எறிகணைத் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுளனர்.

சிங்கபுர இராணுவ முகாமிலிருந்து கட்டுமுறிவு நோக்கி திசை திருப்புவதற்காக ஒரு நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

பனிச்சங்கேணியில் தரையிறக்க முயற்சி மேற்கொண்ட கடற்படையினரை தமிழீழ கடற்படையினர் விரட்டியடித்தனர்.

சிறிலங்கா இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 100 எறிகணைகளுடன் இரு 81 எம்.எம். மோர்ட்டார்கள், எறிகணைகளுடன் ஒரு 60 எம்.எம். மோர்ட்டார், 10 ரொக்கெட் புரொபெல்ட் கிரனைட் லோஞ்சர்கள், பி.கே.எல்.எம்.ஜிகள், ஏ.கே.எல்.எம்.ஜிகள், ஏ.கே.47 துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்கள் வாகரையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார் சி.எழிலன்.

புலிகளால் கைது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கே.எம்.எஸ். ரட்ணநாயக்க இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பில் கூறியதாவது:
வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உள்நுழைந்தோம். கஜூவத்த இராணுவ முகாமிலிருந்து ஏ-15 வீதியூடாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் நுழைந்தோம். பனிச்சங்கேணி கடற்பிரதேசத்தில் கடற்படையும் எமது அணியுடன் இணைந்தது.

வயது குறைந்த சிறார்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட துணை இராணுவக் குழுவினரையும் எமது வழிகாட்டுதலின் கீழ் இணைத்துக் கொண்டோம். அவர்களும் இராணுவச் சீருடையை அணிந்திருந்தனர். அவர்களை அடையாளம் காண்பதற்காக அவர்கள் கைகளில் பச்சை பட்டை அணிவிக்கப்பட்டிருந்தது என்றார் அவர்.

அடையாளம் காணப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரது உடல்கள் விவரம்:

- லான்ஸ் கோர்ப்ரல் ஏ.பிரேமேச்சந்திர (S413527), அத்துலபுர, றக்குவானை, இரத்னபுரி
- சார்ஜன்ட் ஆர்.டி. அத்துலகுமார (S41398151), கட்டுவக்க, கொட்டுபிப்ட்டிய, வெலிமட, நுவரெலியா
- சார்ஜன்ட் எஸ்.என்.டி. பண்டாரநாயக்க (S418182) ககல்வத்துர, நிவாச, தொலஸ்வெவ, இரத்தினபுரி
- S413951 (பெயர் வெளியாகவில்லை)
- S406842 (பெயர் வெளியாகவில்லை)
- S413527 (பெயர் வெளியாகவில்லை)
- S413250 (பெயர் வெளியாகவில்லை)

மேலும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்திருந்த சார்ஜன்ட் பண்டாரநாயக்க என்பவர் விடுதலைப் புலிகளின் சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் படங்களுடன் வாசிக்க: புதினம்

3 பின்னூட்டங்கள்:

said...

படுகாயமடைந்திருந்த சார்ஜன்ட் பண்டாரநாயக்க என்பவர் விடுதலைப் புலிகளின் சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்//


இதை நமபவது கடினம்.....

விடுதலை புலிகளுக்கு கொல்லதான் தெரியும்.... சிகிச்சைக் அளிக்காமல் சாகடித்தியிருப்பர்.....

எந்தன் புலி புல்லை தின்றுக்கிறது.....கூறுவது அனைக்க்தும் பொய் செய்தி....

said...

மத்த LTTE தீவிரவாத வலைபூ கோழைகள் போல post a comment-டை எடுத்துவிடுடேன்..

said...

Colombo declines to receive bodies of dead soldiers, captured soldier talks to media

[TamilNet, Saturday, 07 October 2006, 08:07 GMT]
The fighting formation of Liberation Tigers of Tamil Eelam (LTTE) forces, "boxed" an area of 10 square kilometers and defeated Sri Lankan offensive towards Vaharai Friday, LTTE Trincomalee Political Head S. Elilan said Saturday. Accusing Sri Lanka for violating the Ceasefire Agreement (CFA) and the Geneva Agreement of disarming the paramilitary cadres, Mr. Elian said 400 Sri Lankan troops, including 80 paramilitary cadres, were involved in the Sri Lankan offensive. K.M.S. Ratnayake, a soldier from Sri Lanka's 6th Battalion of Gemunu Watch, was captured alive by the Tigers. Colombo has refused to accept 9 bodies of SLA soldiers killed in the encounter, Mr. Elilan said.

Ratnayake said more than 300 Sri Lankan troopers had entered the area with a mission to capture the Vaharai territory. Re-inforcement troops were ready to follow the advancing troops to strengthen the positions after they entered Vaharai, he added.

A group of soldiers landed by Sri Lanka Navy (SLN) in Panichchankerni and joined the crack unit that entered the LTTE territory via A-15 road from Kajuwatte SLA camp, according to the captured soldier.

more news and photos: TamilNet