Thursday, October 12, 2006

200 இராணுவத்தினர் பலி, 75 சடலங்கள் மீட்பு

இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிப்பு: 200 இராணுவத்தினர் பலி- 75 சடலங்கள் மீட்பு

[புதன்கிழமை, 11 ஒக்ரொபர் 2006, 19:55 ஈழம்]

வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய அளவிலான வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட 75-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பறப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் 4 டாங்கிகள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன.பல நூற்றுக்கணக்கான போராயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடபோர்முனையில் முகமாலை முதல் கிளாலி வரையான முன்னரங்கப் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கி பாரிய அளவில் முன்னகர்ந்தனர்.

முன்னகர்ந்த படையினர் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளுக்குள் ஊடுருவிய நிலையில் விடுதலைப் புலிகள் தீவிர பதில் தாக்குதலை தொடுத்தனர்.
இன்று மாலை 6.30 மணிவரை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தீவிர முறியடிப்புத் தாக்குதலால் இராணுவத்தினர் பாரிய இழப்புக்கள் அழிவுகளுடன் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்த முறியடிப்புத் தாக்குதலின் போது இராணுவத்தினரின் டாங்கிகள் 4 விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதல்களில் தமது டாங்கிகளில் சிக்கியும் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

டாங்கிகளில் சிக்கி கொல்லப்பட்ட இராணுவச் சடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட இராணுவச் சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கிளிநொச்சிக்கு கொண்டு வரப்படுகின்றன.
இராணுவத்தினரின் சடலங்களை பொதி செய்தற்கான பைகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியுள்ளது.

இன்றைய தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவத்தினரை இராணுவத்தரப்பு வரணிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று அங்கிருந்து 3 உலங்குவானூர்திகள் மூலம் பலாலிக்கும் அங்கிருந்து கொழும்புக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வரணிக்கும் பலாலிக்கும் இடையில் இன்று பகல் முழுமையும் 3 உலங்குவானூர்திகள் காயமடைந்த இராணுவத்தினரை ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டன.

இன்றைய முறியடிப்புத் தாக்குதலில் துணைப்படை வீரர்கள் நால்வரும் போராளிகள் 6 பேரும் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.

நன்றி: புதினம்

2 பின்னூட்டங்கள்:

said...

பொய் சொல்லுருதுன்னு முடிவுபண்ணிடீர் அப்புறம் என்ன 200 இராணுவத்தினர்...

எல்லா இலங்கை ஒட்டு மொத்த இராணுவத்தினரையும் புலிகள் கொன்னுட்டாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே.....

குண்டுசட்டியிலே குதிரை ஒட்டாதீர்.... அப்படியே வெளி நாட்டு பத்திரிக்கை என்ன சொல்லுதுன்னு பாரும்மீர்

said...

போராளிகள் 6 பேரும் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.



போராளிகள்-ளா....

தீவிரவாதிகள் ந்னு ஒழுங்க எழுத தெரியாதா.?